உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/28

பல முறை கீழ விழுந்திருக்கேன்! - பிரசாந்த்


"கோட்டைகளையும் குதிரைகளையும் பார்த்து நாளாகிவிட்ட தமிழ் ரசிகர்களுக்கு முதல்வர் கருணாநிதியின் ஆக்ரோஷமான இந்த கதை, புது ரசனையை கொடுக்கும்" என்கிறார் பொன்னராகவும் சங்கராகவும் அவதாரம் எடுத்துள்ள பிரசாந்த். "படிக்க படிக்க ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த நாவல் 'பொன்னர் சங்கர்'. இவ்வளவு பெரிய நாவலை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள்ள அடக்க முடியுமான்னு யோசிச்சப்போ, முதல்வர் அதை சுருக்கி தந்தார். அவர் அப்ப எழுதிய வசனங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துற மாதிரி இருக்கு. இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது, 'பொன்னர் சங்கர்'." இவ்வாறு படத்தைப் பற்றியும் படப்பிடிப்பின் அனுபவங்களை பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பிரசாந்த்!
படத்துல நிறைய நட்சத்திர கூட்டம் இருக்கும் போலயே...?
ஆமா. இந்த கதை அப்படியானது. குஷ்பு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சினேகான்னு நிறைய கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இவ்வளவு பேர் கால்ஷீட்டையும் வாங்கி ஒரே நேரத்துல ஷூட் பண்றது சாதாரண விஷயமில்லை. அப்பா தியாகராஜன் டைரக்டரா அதுக்கான வேலையை பக்காவா பண்ணினார். அதுக்கு எல்லோருமே ஒத்துழைப்பு கொடுத்தாங்க.
குதிரை, வாள் சண்டைன்னு ஸ்டில்கள் மிரட்டுதே?
சின்ன வயசுலேயே சினிமாவுக்கான எல்லா விஷயத்தையும் கத்துக்கிட்டவன் நான். அதுல ஒண்ணு குதிரையேற்றம். இது போர் பற்றிய படம்தான். இரண்டு போர் காட்சிகள் இருக்கு. இதுவரை பார்க்காததா, ரொம்ப மிரட்டலா இருக்கும். பெரிய கூட்டத்தை வச்சு இந்த காட்சியை எடுத்திருக்கோம். சண்டைக்கு நிஜ வாள்களையே பயன்படுத்தினோம்.
பல முறை காயம் பட்டதுன்னு சொன்னாங்களே?
பல முறை கீழ விழுந்திருக்கேன். சில விழுப்புண்களை தாங்கியிருக்கிறேன். இதெல்லாம் நான் பண்ணின தப்புனால இல்லை. குதிரை சில நேரங்கள் அடம்பிடிச்சதால. கால் வலிக்குதுன்னு சொன்னா, 'இதெல்லாம் ஒரு காயமா'ன்னு அப்பா கடுப்பாயிருவார். அதனால அதை பொருட்படுத்தாம நடிச்சேன். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியா இருக்கும்.
இரண்டு கேரக்டர்ல, என்ன வித்தியாசம் பண்ணியிருக்கீங்க?
ஜீன்ஸ்ல ரெண்டு கேரக்டர் பண்ணினேன். அதுல அவ்வளவா வித்தியாசம் இருக்காது. ஏன்னா, ரெண்டு பேரும் ட்வின்ஸ்னு கதை போகும். இதுல சில வித்தியாசங்கள் தெரியும். பொன்னர் யார், சங்கர் யார்னு அடையாளம் காணுற மாதிரிதான் இருக்கும். இப்பவே சொன்னா அந்த சஸ்பென்ஸ் போயிரும்.
அடிக்கடி ஹீரோயினை மாத்தினீங்களே ஏன்?
ஆமா. நிறைய பேரை செலக்ட பண்ணினோம். சிலரை தேர்வு பண்ணி ஷூட்டிங் ஆரம்பிச்சா, அங்க வந்து செட்டாகலை. ரெண்டு ஹீரோயின் கேரக்டருமே ஒண்ணுபோல இருக்கணும். இதனால 3 முறை செலக்ட் பண்ணி மாற்ற வேண்டியதா போச்சு. பிறகு பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ்வரன்ங்கற ரெண்டு பேரை செலக்ட் பண்ணி நடிக்க வச்சோம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.