உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/30

இலங்கை இறுதி போட்டிக்கு நுழைந்தது - தில்ஷான், சங்ககார அரைச்சதம்

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்தின் சார்பில் ஸ்டைரிஷ் 57 ஓட்டங்களை எடுத்ததர். பந்துவீச்சில் மலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 பந்துகளில் ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை கடந்தது. இலங்கை அணியின் சார்பில் தில்ஷான் 73 ஓட்டங்களையும், குமார் சங்ககார 54 ஓட்டங்களையும் எடுத்து வெற்றிக்கு வழிகோரினர்.

 
இன்று   இந்தியா- பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.