உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/31

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

மொஹாலியில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தனது ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது.

மிஸ்பா உல் ஹக் துவக்கத்தில் அறு அறுவென்று அறுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளினார். அவரே அதனை எதிர்கொள்ள வேண்டியதாகி 50-வது ஓவரின் 5-வது பந்தை ஜாகீர் கானை வெளியே அடிக்க முயன்றார் பந்து கொடியேறியது கோலி அதனை பிடித்தார் இந்தியா 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதியில் நுழைந்தது. தோனி தலைமையில் முதன் முதலாக நுழைந்தது.

கிரெக் சாப்பல் இந்திய அணியை 2007-ல் கவிழ்க்க, கேரி கர்ஸ்டன், தோனி இணைவில் இந்தியா உலக கோப்பை இறுதியில் நுழைந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பையில் இலங்கையைச் சந்திக்கிறது.

மிஸ்பா உல் ஹக் ஒரு முனையில் முன்னமேயே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் எதிர் முனை பேட்ஸ்மென்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதில்தான் உமர் அக்மல், அஃப்ரீடி, ரசாக் ஆகிய அதிரடி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

அஷ்வினை நீக்கி விட்டு நெஹ்ராவை களமிறக்கியதற்கு தோனி மீது கடும் விமர்சனம் இருந்தது. ஆனால் நெஹ்ரா 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக வீசினார்.

முனாப் படேல் ஹபீஸ் விக்கெட்டையும் ரசாக் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதேபோல் முக்கியமான திருப்பம் அபாயகரமான உமர் அக்மலையும், அஃப்ரீடியையும் ஹர்பஜன் வீழ்த்தியதாகும்.

தோனியின் கேப்டன் உத்தி அபாரமாக இருந்தது. அவர் கடுமையான நெருக்கடியை கொடுத்தார். பந்து வீச்சு மாற்றம் அபாரமாக இருந்தது. ஃபீல்டிங் உத்தி மிகவும் சிறப்பாக இருந்தது.

யுவ்ராஜ் சிங் அபாரமாக வீசி முதல் 5 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஷஃபீக் விக்கெட்டையும், யூனிஸ் கானையும் வீழ்த்தி உண்மையில் இன்று இந்தியா வெல்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

ஒரு அணியாக நன்றாக இந்தியா விளையாடியது. ஆட்டநாயகன் விருது மிகவும் கடினம் ஏனெனில் சச்சின் அரைசதம் மிஸ்பா உல் ஹக் அறுவை அரை சதம். மொத்தம் இரு அரைசதங்கள்தான்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் இன்றும் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஹை வோல்டேஜ் அரையிறுதியில் அழுத்தத்தை பிரமாதமாக எதிர்கொண்டு இந்திய அணி வெற்றி பெற்றது.

சச்சின் டெண்டுல்கர் தாங்கள் அணி 310 அல்லது 320 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

5 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது அந்த போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடியுள்ளார்.

மும்பையில் சொந்த மண்ணில் சச்சின் உலகக் கோப்பை இறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறார். முரளிதரனின் கடைசி ஓரு நாள் போட்டி சச்சினின் 100-வது சதம் உலகக் கோப்பை கனவு என்னவாகும் என்பதை தீர்மானிக்க நாம் 2ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியம்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.