உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/29

கொஞ்சம் சிரித்தால் என்னவாம்?


துன்பம் வரும் வேளையிலே சிரிங்க, என்று வள்ளுவர் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும் அது எக்காலத்துக்கும் பொருந்தும் சிறந்த அறிவுரை!

இன்னும் சொல்லப் போனால்,சிரிப்பதற்கு துன்பம் வரும் வரை  காத்திருக்க வேண்டிய தேவையில்லை. .சிரிக்கப் பழகினால் துன்பம் என்பது வராமலும்  கூட போகலாம்.
'நண்பர்களை பெறுவது எப்படி?' என்ற தலைப்பில்  டேல் கார்னிஜ் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் எழுதுகையில் யாரைப் சந்தித்தாலும் புன்னகைக்கச் சொல்கிறார். உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சந்திக்கும் பால்காரர்,லிப்ட் ஆபரேட்டர், பேருந்து நடத்துனர் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

பொதுவாக ஆங்கிலேயர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு, தெரிந்தவர், தெரியாதவர் என்று இல்லாமல்  யாரையும் பார்த்தவுடன் மென்மையாக புன்னகைத்து வைப்பார்கள்.

சற்று யோசித்துப் பார்க்காலாம் , ஒரு குழந்தையை கொஞ்சிகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் குழந்தையிடம் நாம் என்ன எதிர்பாக்கிறோம்? குழந்தை சிரிக்க வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறோம்.   குழந்தை சிரித்தால் உடனே  அதைக் அன்புடன் கையில் ஏந்த இரு கைகளையும் நீட்டுகிறோம் அல்லவா? அப்படித்தான், நாம் மற்றவர்களைப் பார்த்து புன்னகைக்கும் பொழுது நமக்கு கிடைக்கும் காந்த சக்தியும்!

புன்னகை நட்பையும், பாசத்தையும், வளர்க்கும். கோபமாக சண்டைபோட வருபவர்கள் கூட, நாம் அவர்களை புன்னகையுடன் எதிர் நோக்கினால், அவர்கள் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு சற்று நம்பிக்கையுடன் பேச ஆரம்பிப்பார்கள்.

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்வார்களே, அதற்கேற்ப சிலர் நன்றாக மனம்விட்டு சிரித்து மகிழ்வார்கள், நல்ல ஜோக் ஒன்றை சொன்னாலும் நன்கு ரசித்து சிரிப்பார்கள். சிலர் நகைச்சுவையாக  அவர்களைக் கிண்டல் அடித்தால் கூட, ஒரு நகைச்சுவை உணர்வுடன்  மனமார சிரித்து  ஒரு நல்ல சூழலை உருவாக்குவார்கள். அவர்களுடைய நட்பு என்றும் நீடிக்கும்.

திரைப்படக் கதாநாயகர்களைக் கூட மக்கள் மறந்து விடுகிறார்கள்,ஆனால் காமெடி நடிகர்கள், அவர்கள் எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியினராக இருந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்கிறார்கள். சார்லி சாப்ளின்,லாரல் ஹார்டி, கலைவாணர் என்,எஸ், கிருஷ்ணன், தங்கவேல், நாகேஷ், மனோரமா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு மக்கள், தொலைகாட்சி சேனல்களில் திரைப்பட காமெடி காட்சிகளை ரசிப்பது கூட ஒரு நல்ல வரவேற்கக் கூடிய விஷயம் தான். கார்ட்டூன் ஓவியர்கள் ஒரு பக்கம் பட்டையை கிளப்புகிறார்கள். அவர்கள் வரையும் சித்திரங்களுக்கு வசனமே கூட தேவையில்லை. இன்றைய தமிழ் பத்திரிகை உலகில்  ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் நல்ல நகைச்சுவை கதைகளை, கார்ட்டூன்களை வழங்கி வருகின்றன. கோபுலு சித்திரங்கள், மதன் ஜோக்ஸ் இப்படி பற்பல நகைச்சுவை விருந்துகள், நகைச்சுவை ட்டிமன்றங்கள் ஒருபக்கம் மக்களை சிரிப்புக்கடலில் முழுகவைக்கின்றன, சாலமன் பாப்பையா ,ராஜா, லியோனி, போன்றவர்கள் மக்கள் மத்தியில் என்றும் ஹீரோக்கள் தான்.

சிரிப்பு கூட ஒரு வகையில் தொற்று நோயாமே! (நோயென்றால் மற்ற நோய்களைப் போல அல்லாமல் ,சிரிப்பு நோய்களை தீர்க்கும் நோய் என்று கூட சொல்லாம்)  ஒரு சில காமெடி நடிகர்கள், மேடை பேச்சாளர்கள் முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு அப்பாவி போல் பேசுவார்கள், ஆனால் அரங்கமே சிரிப்பில் அதிரும், அவர்கள் ஒரு வகை என்றால், தமிழ் நகைச்சுவை நடிகர் மதன்பாப் போன்ற ஒரு சிலர் அவர்கள் வயிறு குலுங்க ,குலுங்க சிரித்தே மற்றவர்களுக்கும் சிரிப்பு நோயை தொற்ற வைத்து விடுவார்கள்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் ஒரு திரைப்படப் பாடலில் சங்கீதச் சிரிப்பு, சாகச சிரிப்பு, என்று பல வகையில் சிரித்துக் காட்டுவார் அதைப்போல நீங்கள் எப்படி சிரிப்பீர்களோ தெரியாது, உங்கள் ஸ்டைலில் நீங்கள், தாராளமாக சிரியுங்கள், சிரிப்போடும், சிறப்போடும் வாழுங்கள்! !

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.