உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/13

இடைவிடாத தும்மலுக்கு...! பாட்டி வைத்தியம்காலையில எழுந்தா விடாத தும்மல்.. அது நிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது. முன்னையெல்லாம் எப்பவாச்சும்தான் வரும்.. இப்ப அடிக்கடி வருது பாட்டி. அதுக்கு ஏதாவது மருந்து சொல்லுவீங்கன்னுதான் வந்தேன்.
கடலையை வாயில் போட்டு மென்று அதக்கியபடியே அமுதா சொன்னதைக் கேட்ட பாட்டி, தும்மல் வரதுக்கு பல காரணங்கள் இருக்குடியம்மா.. மழையில நனைஞ்சா மட்டுமில்ல.. தூசியினாலயும் வரும். அஜீரணக் கோளாறும், மலச்சிக்கலும் இருந்தா மூலச்சூடு அதிகமாயி கூட தும்மல் வரும். எல்லாத்துக்குமே நுரையீரல்ல ஏற்படுற பாதிப்புதான் காரணம். முக்கியமா உடல் சூடானா, மூக்குல நீர் கோத்து தும்மல் உண்டாகும்பாங்க.
பொதுவா அஜீரணக் கோளாறு ஏற்படாம பாத்துக்கணும். அதிக தூசில போகக்கூடாது. ஐஸ்வாட்டர், கூல்டிரிங்ஸ்னு அதிக குளிர்ச்சியா இருக்குற பொருள்கள சாப்பிடக் கூடாது. அதோடு...
சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, நறுக்குமூலம், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இவற்றை வாங்கி காயவச்சு, சம எடை சேர்த்து இடிச்சி பொடியாக்கி வச்சிக்கிட்டு, காலை, மாலைன்னு ரெண்டு வேளையும் ஒரு மண்டலம் சாப்பிடு  குணமாயிடும் என்றார்.
பாட்டி மருந்து சொல்லி முடிக்கவும், அமுதாவின் கிண்ணத்தில் இருந்த கடலை தீர்ந்து போகவும் சரியாக இருந்தது. பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அமுதா.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.