உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/27

கோடை வந்துருச்சு.....உஷாரு!

இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டியெடுக்க வேண்டும் என்கிற தீவிரத்துடன், உச்ச நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வெயில் வேகத்தின் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சுட்டெரிக்கும் வெயில் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில் பெற்றோர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


வெயில் காலத்தில் டயோரியா, நீர்சத்து இழப்பு, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே குடிக்கும் தண்­ர் உரிய சுகாதாரத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.


நீர் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில், சிலர் பாதுகாப்பற்ற தண்­ரை குடிக்கவும் செய்கின்றனர். தண்­ணீர் உரிய முறையில் இல்லாத போது, நோய்கள் வர காரணமாக அமைகிறது என குழந்தைகள் சிகிச்சை மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி கூறினார்.


நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பவர்கள் மோர் அருந்தி வருவது நல்லது. சில குழந்தைகள் கோடை காலத்திலும் வென்னீரில் குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கும். அதனை தவிர்க்கவேண்டும். இடியாப்பம், இட்லி போன்ற எளிமையாக ஜீரண உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.


அனைத்து வயது குழந்தைகளுக்கும் வைட்டமின் 'சி' சார்ந்த உணவுப் பொருள் அவசியமானது. எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம். செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.


கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகம். அதிகாலை, மாலை நேரங்களில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேன்டும். 15 வயது வரை உள்ள குழந்தைகளின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் இந்த வயதினருக்கு மஞ்சள் காமாலை, அம்மை, டைபாய்டு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை போல் பெரியவர்களும் தினமும் தண்­ணீர் அதிக அளவு குடிக்கவேண்டும்.


கோடை காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் பெற்றோர் நோய் தற்காப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். கோடை காலத்தில் வியர்வை அதிகம் இருக்கும்.


எனவே தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. நோய் தாக்கும் இந்த கால கட்டத்தில் நோய் வராமல் தடுக்க வெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி இடங்களில் தண்­ணீர் சுகாதாரம் எந்த நிலையில் உள்ளது என உறுதி கூற முடியாது என்றும் மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி தெரிவித்தார். குழந்தைகள் மதிய நேரங்களில் கேரம் போர்டு, செஸ் போன்ற இண்டோர் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. கோடை காலத்தில் 2 வயது வரை உள்ள குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த தருணத்தில் மிக இளம் குழந்தைகளுக்கு நீர்சத்து இழப்பு, சுவாச தொற்று போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.