உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/23

முத்துக்கு முத்தாக -விமர்சனம்தார் சாலையே கொதிக்கிற வெயில் காலத்தில்தான் தர்பூசணிக்கு மரியாதை! குடும்ப உறவுகள் கேள்விக்குறியாகி வரும் இந்த காலத்தில்தான் இதுபோன்ற படங்களுக்கு வரவேற்பும், வணக்கமும் தேவை! இதையெல்லாம் சொந்த பணத்தில் சொல்ல வந்திருக்கிறார் ராசு.மதுரவன் என்கிறபோது அக்கறையோடு இப்படத்தை அரவணைக்க தோன்றுகிறது.
ஐந்து பெண்ணை பெற்றவன் ஆண்டியாவான் என்கிறது கிராமத்து பழமொழி. ஆனால் ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்ற இளவரசி-சரண்யா தம்பதிகளின் இறுதிகாலம் என்னவாகிறது என்பதுதான் இந்த படத்தின் க்ளைமாக்ஸ்.
தனது அப்பாவை தரக்குறைவாக பேசிவிட்டான் என்பதற்காக யாரோ ஒருவனை இழுத்துப் போட்டு அடிக்கும் களேபர காட்சியோடு துவங்குகிறது படம். இவ்வளவு பாசமுள்ள ஆண் பிள்ளைகள் அதே பாசத்தோடு வளர, இடையில் வரும் மருமகள்கள்தான் கொள்ளிக்கட்டையை சீப்பாக்கி குடும்பத்துக்கே சிக்கெடுக்கிறார்கள்.
ஐந்து மகன்களில் மூத்தவரான 'நட்டு' வாத்தியார் ஆகிவிடுகிறார். அவருக்கேற்ற 'போல்ட்'டாக சுஜிபாலாவை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்து வைக்கிறார்கள். பணி காரணமாக பத்து கிலோ மீட்டர் தள்ளி தனிக்குடித்தனம் போய்விடுகிறார் அவர். ஹரிஷ§க்கு வேலை கிடைத்து சென்னைக்கு போய்விடுகிறார். பிரகாஷை வீட்டோடு மாப்பிள்ளையாக வேறு ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். விக்ராந்த் மனைவியின் கட்டாயத்தால் டவுனிலேயே குடியேறிவிடுகிறார். எஞ்சியிருக்கிற வீரசமர், ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விட, கூட்டமாக வாழ்ந்த இல்லம், குருவிக்கூடு போலாகிறது.
பாசத்தோடு பேரப்பிள்ளைகளை பார்க்க கிளம்புகிற பெரிசுகளுக்கு மருமகள்கள்களின் நஞ்சு கலந்த வார்த்தையே விருந்தாகிவிட, கண்ணீரும் கவலையுமாக ஊர் திரும்புகிறார்கள். அப்புறம்...? பின்னணி இசையில் ஷெனாய் கிழிய, பிழிய பிழிய அழுகிறது தியேட்டர்.
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், 'இளவரசு'க்கு இந்த படம்தான் பொருத்தமான சிம்மாசனம். சரண்யா கொடுத்தது விஷம் என்று தெரிந்த பின்பும், ஆத்தா... கறிக்கொழம்பு இன்னைக்கு அம்புட்டு ருசியாருக்கே... என்று பெருமையோடு விழுங்குகிற காட்சியில் தேம்பி அழ வைக்கிறார். சரண்யாவுக்கு மட்டுமென்ன, இதுபோன்ற கேரக்டர்களில் பலமுறை நடித்திருந்தாலும், இந்த படத்தில் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி நின்று கதற வைக்கிறார்.
ஒரு புறம் மனசை கிள்ளிவிட்டு அழ வைத்தாலும், மறுபுறம் வயிற்றை கிள்ளி விட்டு சிரிக்க வைக்கவென்றே கொண்டு வந்திருக்கிறார்கள் சிங்கம்புலியை. ஆள் நடமாட்டம் இல்லாத அத்துவான மைதானத்தில் வேனை நிறுத்தி, வண்டி பத்து நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கலாம் என்று அலப்பறை கொடுக்கிறார் மனுஷன். இவரது ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூமும், பாடி லாங்குவேஜும் பார்த்த மாத்திரத்திலேயே பற்ற வைக்கிறது சிரிப்பை. டாக்டராக வரும் தேவராஜ் கேரக்டர் இரண்டே சீன்களில் வந்தாலும், மருத்துவர்களின் மார்க்கெட் ரகசியத்தை உடைக்கிறது.
விக்ராந்த்-மோனிகா காதலில் இருக்கிற அழகும், நேர்த்தியும், ஹரிஷ்-ஓவியா ஜோடியிடம் இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான்.
ஜெயிலுக்கு போன காரணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் வீரசமர். ஆனால் கோர்ட் வாசலில் நிற்கிற அத்தனை பேருக்கும் கேட்கிற மாதிரி சொல்லி, அந்த லாஜிக்கையும் உடைப்பதுதான் ஐயகோ. இவரால் கொலையுறப்படும் ரகுவண்ணன் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம்.
கவி பெரியதம்பி இசையில் என்ன பண்ணி தொலைச்சே... விசேஷம்! பின்னணி இசையில் 'சின்ன' தம்பியாகி விட்டதுதான் சோகம். யு.கே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு வழக்கம் போல அழகு. படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் என்கிறது டைட்டில். நம்ப முடியாத அளவுக்கு இழுவை.
அந்த காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் மாதிரி தனக்கென்று சில நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு திரைப்பயணம் செய்கிற வித்தை தெரிந்திருக்கிறது ராசு மதுரவனுக்கு.
இது பாலிஷ் போடாத முத்து!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.