உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/26

கற்பு முடிந்து போன விஷயம் - குஷ்பு அதிரடி!

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.  ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து  கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார். 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.