உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/05

வெட்ட வெட்ட வளருமா மனித இதயம்?டெக்சாஸ் சவுத் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் துண்டான இதயம் மீண்டும் வளர்வதை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். 

மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு இதயம் பாதிக்கப்பட்டால் மீண்டும் வளரும். ஆனால், முதல்முறையாக பாலுட்டி வகையை சேர்ந்த எலிகளுக்கும் இது சாத்தியம் என்ற அதிசய தகவல் வெளியாகி உள்ளது.

இதய தசை உற்பத்தி செய்யும் புதிய திசு வளர்ச்சியே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள ஆராய்ச்சி யாளர்கள், மனிதர்களுக்கும் இத்தகைய முறை சாத்தியப்படுமா என்பது குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மிக துல்லியமான நுண்ணிய ஆராய்ச்சிக்கு பிறகே இதற்கான வாய்ப்புகள் குறித்து தெரியவரும் என்கிறார் ஆராய்ச்சி குழுவில் உள்ள இதய நிபுணர் ஜெர்மி பியர்சன்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்பது ஆய்வுக் குழுவினரின் கணிப்பு.

இந்த ஆராய்ச்சிக்காக முதல்கட்டமாக பிறந்து ஒரு நாளே ஆன சிறிய எலி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் இதயத்தின் இடப்புறத்தில் இருந்து வென்ட்ரிகிள் பகுதியின் 15 சதவீத பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, கண்காணிக்க தொடங்கினர்.

21 நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய இதயம், 2 மாதத்தில் இயல்பாக செயல்படத் துவங்கியது. எலிகளின் இதயத் தசையில் இருந்தே உருவாகும் திசுக்கள் இதற்கு வழி செய்தது தெரியவந்தது.

எத்தகைய சூழ்நிலையில் இது சாத்தியமாகும் என்பது உள்ளிட்ட தொடர் ஆராய்ச்சியில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.