உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/20

மக்களின் விருப்பத்தை தீர்மானிக்கும் கருவியாக இணையத்தளங்கள்


பிரபல சமூக வலைப்பின்னல் தளங்களான கூகுள் மற்றும் டுவிடர் தளங்கள் தற்காலத்தில் மக்களின் கொள்வனவு விருப்பத்தை தீர்மானிக்கும் சக்திமிக்க கருவிகளாக உள்ளதாக பிரபல இணையத்தள ஆராச்சி நிறுவனமான நீல்சன் தெரிவித்துள்ளது.


உலகலாவிய இணையத்தள பாவனையாளர்களில் நால்வரில் ஒருவர் மேற்கூரிய சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு வருகைத் தருவதாகவும், அவர்கள் சராசரியாக மாதத்திற்கு 6 மணித்தியாலங்கள் அவற்றில் செலவிடுவதாகவம் மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வர்த்தககுறிகளில் சமூக வலைப்பின்னல் தளங்களான பேஸ்புக், விக்கிபீடியா,யூ டியூப் ஆகிய தளங்களும் உள்ளடங்குவதாக மேற்படி நிறுவனம் தனது கடந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேற் கூரிய சமூகவலைப் பின்னல் தளங்கள் மக்களின் நுகர்வுத் தெரிவில் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவும், அவை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் நீல்சன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான சார்ல்ஸ் புச்வால்டர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக பொருட்களை மதிப்பீடு செய்யும் பழக்கம் மக்களிடையே மிகவும் நம்பிக்கைக்குரிய விடயமாக கருதுவதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற் கூரிய நடைமுறையானது இலத்திரனியல் அழகுசாதனம் மற்றும் உணவுப்பொட்கள் கொள்வனவில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகின்றது. சமூகவிலைப்பின்னல் பாவனையாளர்களில் 32 சதவீதம் தங்களது அலுவலகங்களிருந்தும், 31 சதவீதம் தங்கள் படுக்கை அறைகளிருந்தும் வருகைத் தருவதாக மேற்படி ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி மேற்படி வலைப்பின்னல் வலைதளங்கள் வணிக நடவடிக்கைகளில் பாரிய தாக்கம் செலுத்துவதுடன் இந்த மாற்றங்களுக்கு இசைவாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

1 கருத்து:

  1. உண்மையான தகவல் இன்னும் எதிர் காலங்களில் இணைய தளங்களின் பயன் பாடு அதிகமான இருக்கும்...

    அதை சமுகத்திற்கு பயன்படும் படி செய்வோம்..

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.