உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/29

நமீதா டூ திரிஷா


நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி யாராவது ஏதாவது சொன்னா மொத ஆளா நின்னுக் கேட்டுத் தெரிஞ்சிப்போம். இந்த டாபிக்ல அப்படி ஒரு ஆர்வம் மக்களுக்கு. சரி. சும்மா வழக்கம் போலக் கேட்டுட்டு இதையும் மறந்துடாதீங்க. இதெல்லாம் ரொம்ப சிம்பிள் டிப்ஸ்.

நீங்க உங்க வெயிட்ட குறைக்கனும்னு முடிவு செஞ்சவுடனே செய்ய வேண்டியது முதல்ல BMI (Body Mass Index) பாத்துக்கனும். ஏன்னா எல்லாரும் ஐம்பது கிலோ தாஜ் மகாலா இருக்கமுடியாது. ஒவ்வொருத்தரோட வயசு, உயரம் மற்றும் உடல்வாகு, ஜீன் இத மாதிரி பல விஷயங்கள மனசில வச்சு நம்ம எடை எவ்வளவு இருக்கனும்னு தீர்மானிக்கனும். 55 கிலோ எடைத் தேவைப்படறவங்க ஐஸ்வர்யா ராய மனசில நெனச்சுக்கிட்டு ஐம்பது கிலோவுக்கு வெயிட்ட கம்மி பண்ணாங்கன்னா அப்புறம் எழுந்து நடக்கவே முடியாது. மயக்கம் வரும் இன்னும் பல வியாதியும் வந்து சேரும். அதனால முதல்ல BMI (Body Mass Index) பாத்துக்கனும்.

அடுத்து ஒரு டயட் சார்ட் போட்டுக்கனும். ஒரு மாசத்துல் நாம் இத்தனை கிலோ எடையக் குறைக்கனும்னா இத்தனை கலோரி கம்மிப் பண்ணனும். அதே சமயம் நாம ஆக்டிவ்வா இருக்க நம்ம உடம்புக்கு இத்தனை கலோரி தேவைப்படுதுன்னு ஒரு சார்ட் தயார் பண்ணிக்கனும். அதுல எந்தந்த உணவுக்கு தடா, எந்தந்த உணவு புதுவரவு, அத எந்தளவுக்கு சாப்பிடலாம் என முழுமையா இருக்கனும். இது பெரும்பாலும் ஒரு நல்ல டாக்டர்கிட்டயோ இல்ல டயட்டீஷியனையோ கலந்தாலோசிச்சு பண்றது நல்லது.
எடையக் குறைக்கிறதுல் தண்ணிக்கு பெரும் பங்கு இருக்குங்க. சிரிக்காதீங்க. ரெண்டு தண்ணியையும் சேர்த்துதான் சொல்றேன். நல்ல குடித்தண்ணீர் ரொம்ப அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்கனும். ரெண்டு லிட்டர், மூணு லிட்டர்னு தண்ணிக் குடிக்கிறது நல்லது. ஓடறத் தண்ணியில் பாசி சேராதுன்னு சொல்வாங்கல்ல! அதேதான். நிறைய தண்ணி குடிக்க குடிக்க உடம்புல கொழுப்புச் சத்து சேரவே சேராது.
‘அந்த’ தண்ணி அறவே ஆகாதுங்க. பல வியாதி வர்றதோட வெயிட் கூடுறதுல மதுபானங்களுக்கு பெரும் பங்கு இருக்கு. தண்ணியடிக்கிறத அறவே நிறுத்திடுங்க.
சிலர் வெயிட்டக் குறைகிறேன் பேர்வழின்னுட்டு சரியா சாப்பிடவே மாட்டாங்க. நிறைய சாப்பிட்டா வெயிட் போட்டுடும்னு சொல்லி தேவையான அளவு கூட சாப்பிடமாட்டாங்க. அந்த வகையில நீங்களும் மாட்டிக்காதீங்க. எத சாப்பிடனும் எவ்வளவு சாப்பிடனும்னு தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க. சப்பாத்தி சாப்பிட்டா வெயிட் குறையும்னு பரவலா ஒரு கருத்து இருக்கு. ஆனா அது முழுசா உண்மயில்ல. ஏன்னா சப்பாத்தி நம்மூரு உணவுமுறை கிடையாது. நாம எப்பவும் அரிசிச்சோறு சாப்பிடறவங்க. வட இந்தியர்கள் மாதிரி சப்பாத்தி சாப்பிட பிடிக்காது. அதனால வயிறு முட்ட முட்ட சாப்பிடாம அளவா சாப்பிடுவோங்கிற நம்பிக்கைல சப்பாத்தி சாப்பிட சொல்லி சொல்றாங்க. ஆனா நம்ம ஆளுங்க எதுக்கும் கலங்காம சப்பாத்தியா...ம்... கொண்டான்னு அதையும் வெளுத்திக் கட்டிட்டு ‘ நா டயட்ல இருக்கேனாக்கும்.’ பெருமைப்பட்டுக்கறாங்க. அரிசியோ, கோதுமையோ எதையும் அளவா சாப்பிடனும்.
அடுத்து காலை உணவு. எடைக் குறைக்கனும்னு சொன்னவுடனே எல்லாரும் முதல்ல கை வைக்கிறது காலை உணவு (breakfast) தலையிலதான். அது ரொம்ப தப்பு. காலை உணவுங்கிறது நீண்ட நேரம் வெறும் வயித்தோட இல்லாம இருக்கிறதுக்காக சாப்பிடற ஒரு சிற்றுணவு. அத மிஸ் பண்ணா அல்சர் வரும், வாயுத் தொல்லைகள் வரும் இப்படி நிறையக் கோளாறுகள் வரும். அதனால கொஞ்சமா ரெண்டு இட்லி, அல்லது ஓட்ஸ் கஞ்சி, பழச்சாறு, சாலட் என ஏதாவது சாப்பிடுங்க. வயிறு முட்ட இருக்க வேண்டாம். Breakfast என்பதே உண்ணாவிரதத்தை முடிப்பது போலத்தான். முதல்ல ஏதேனும் கொஞ்சமா சாப்பிட்டு பட்டினியப் போக்கிக்கனும். அதுக்காக ஒரு வெட்டு வெட்டிட்டு நகர முடியாம அவஸ்தைப் படக்கூடாது.
மதிய உணவு. இது ரொம்ப முக்கியமான உணவு. இதுலதான் நாம நிறைய காய்கறிகள், பருப்பு என பலவிதமான சத்துக்களையும் சேர்த்துக்கறோம். அதனால் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கனும்.  இதுலதான் நாம ரொம்ப கவனமா இருக்கனும். சாதமோ, சப்பாத்தியோ கம்மியாவும் பொறியல், சாலட் போன்றவைகள எக்கச்சக்கமாவும் சாப்பிடனும். நிறைய நார்ச்சத்துள்ள காய்கறிகள் ரொம்ப நல்லது. கலர்கலரான காய்கறிகள் நிறைய சேத்துக்குங்க.
இடையிடையே நொறுக்குத் தீனி சாப்பிடறதுக்கு தடாப் போட்டாலே பாதி வெயிட் குறைஞ்ச மாதிரிதான். ஒருவேளை நடுல பசிச்சா, மோர் இல்ல ஏதாவது பழங்கள்னு சாப்பிட்டுக்குங்க.
சிலர் என்ன பண்றாங்கன்னா எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட்டா வெயிட் போட்டுடும்னு எண்ணெயே அறவே நெருங்கவிடறதுல்ல. எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட்டா வெயிட் போடுங்கிறதுல சந்தேகமே இல்ல. ஆனா நம்ம சரும பராமரிப்புக்கு எண்ணெய் கொஞ்சம் அவசியம். சருமத்துல வெடிப்பு வராம மிருதுவா இருக்கனும்னா ஓரளவு உடம்புக்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அவ்வளவு சேர்த்துக்கனும். சமையல்ல தாளிக்கிறது மாதிரியான விஷயங்கள்ல எண்ணெய் கண்டிப்பா சேர்த்துக்குங்க. இப்பத்தான் நிறைய சூர்யகாந்தி எண்ணெய், blended oil, ஆலிவ் எண்ணெய்னு விதவிதமா உடம்புக்கு நல்ல எண்ணெய் வகையறாக்கள் கிடைக்குதே. அத வாங்கி அளவா பயன்படுத்துங்க.
எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு ஸ்லிம்மா இருக்கறதுல் ரொம்ப ஆர்வம். அவக்கிட்ட யாரோ சொல்லிருக்காங்க பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் சேர்த்துக்கிட்டா வெயிட் போட்டுடும்னு. அதனால அவ பால் தயிர் மோர்னு எதையும் கனவுல கூட நெனச்சுப் பாக்கல. பால் சம்மந்தப்பட்ட பொருட்கள்ல கொழுப்பு அதிகம்றது உண்மைதான். பால், சீஸ், பனீர், தயிர்,நெய்னு எல்லாமே வெயிட் போடும்தான். அதல்லாம் அவாய்ட் பண்றது நல்லதுதான். ஆனா பால்ல கால்சியம் இருக்குங்கறத மறந்துடக் கூடாது. கால்சியம் எலும்புக்கு, பல்லுக்கு ரொம்ப நல்லது. அது பால்ல நிறைய இருக்கு. அத ஒட்டு மொத்தமா புறக்கணிக்கலாமா? கொழுப்பு எடுத்த பால் தினமும் ஒரு டம்ளராவது சாப்பிடறது நல்லது.
பிஸ்ஸா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகையறாக்கள், இனிப்பு பண்டங்கள், கொழுப்பு நிறைந்த தயிர், நெய், நொறுக்குத் தீனி போன்றவைகளுக்கு ‘நோ’ சொல்லிடுங்க. நிறைய காய், பழங்கள். கீரை, தண்ணீர். பழரசம் சாப்பிடுங்க. இதல்லாம் எவ்வளவு வேணா சாப்பிடலாம் ஆனா சாதமோ, சப்பாத்தியோ அத மட்டும் அளவு மறந்துடாதீங்க. இது எல்லாத்தோடயும் சேர்த்து, வாக்கிங், ஜாகிங், சைக்கிள், யோகா, உடற்பயிற்சின்னு எதையாவது செஞ்சீங்கன்னா பலன் நிச்சயம். வாக்கிங் போனா ஃப்ரெண்டோட அரட்டை அடிச்சிக்கிட்டு நடக்காம, எதுவும் பேசாம வேகமா விடுவிடுவென நடங்க.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.