உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/01

வரும் ஆனா… வராது”!-வடிவேலு


கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. 
ஆட்சியில்
 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி 
திட்டம், ஏழைப்பெண்களுக்கு
 நிதி உதவி 
திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை
 போன்ற திட்டங்கள் என்னை 
மிகவும் கவர்ந்த திட்டங்கள் ஆகும்.
 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், 
கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால
 உதவித்தொகை 6000 ரூபாயில் 
இருந்து 10000 ரூபாய்-ஆக உயர்த்தி 
வழங்கப்படும் என்று முதல்வர் 
கருணாநிதி அறிவித்துள்ளார். 
வேறு எந்த மாநிலத்திலாவது 
வயிற்றில் இருக்கும் சிசுக்களுக்கு
 பணம் அளிக்கும் திட்டங்கள் 
உண்டா? இல்லை. அந்த குழந்தை 
வயிற்றில் இருந்து கருணாநிதிக்கு 
இரண்டு கைகளை எடுத்து நன்றி 
செலுத்துகிறது. தகுதி இல்லை 
நானும் உங்களை போன்ற ஒருவன்
தான். நான் சினிமாவில் பெரிய
 நடிகனாக ஆகிவிட்டாலும், 
என்னுடைய தாய்-தந்தையர் 
இன்னும் கிராமத்து வாழ்க்கைதான் 
நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 
என்னுடைய மகன் சினிமாவில் 
பெரிய ஆளாகி விட்டான் என்று 
பந்தா ஏதும் செய்து கொண்டு 
திரிவதில்லை. உங்களை போலவும்,
 என்னை போலவும் இன்னும் 
அவர்கள் கறுப்பு நிறத்தில்தான்
 காணப்படுகிறார்கள். அப்படி 
இருக்கையில் 5 ஆண்டுகளில் கட்சி 
ஆரம்பித்துவிட்டு தன்னை ஒரு 
கறுப்பு எம்.ஜி.ஆர். என்றும், அடுத்த 
முதல்வர் நான்தான் என்றும் சிலர் 
கூறி வருகின்றனர். நிதானத்தின் 
இருப்பிடம்தான் முதல்வர் 
கருணாநிதி. அவர் 6வது முறையாக
 மீண்டும் முதல்வராக பதவியேற்பது
 உறுதி. நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர்
 ஒருவர் உண்டு என்றால் அது 
கருணாநிதிதான் ஆவார். 
தன்னுடைய கட்சி வேட்பாளரை 
அடிப்பவருக்கு தலைவராக 
ஆகக்கூடிய தகுதி எப்படி 
இருக்க முடியும்? உண்மையான 
தொண்டர்கள் யாரும் தேமுதிக 
கட்சியில் இருக்க வேண்டாம். 
கட்சியை விட்டு இரவோடு இரவாக
 வெளியே வந்துவிடுங்கள். 
கருணாநிதி குடும்ப அரசியல் 
நடத்தி வருவதாக கூறுகின்றனர். 
அவர் ஆட்சிக்கு வந்தபிறகு அது 
குடும்பங்களின் எதிர்காலத்திற்கு 
வழிவகுக்கும் அரசியல் 
கட்சியாகத்தான் இருக்குமே தவிர 
குடும்ப அரசியலாக இருக்காது. 
கறுப்பு எம்.ஜி.ஆர்., பச்சை எம்.ஜி.ஆர்., 
சிகப்பு எம்.ஜி.ஆர். என்று இனிமேல்
 யாராவது உங்களிடம் வந்து 
கூறினால் அவர்களின் பேச்சை
 எல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள். 
எம்.ஜி.ஆரின் மொத்த உருவமே 
இப்போது கருணாநிதிதான். அது 
மட்டுமில்லை, அண்ணா, 
காமராஜர், பெரியார் போன்ற 
தலைவர்களின் ஒட்டுமொத்த 
உருவம்கூட முதல்வர் 
கருணாநிதிதான். எனவே வரும் 
சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன்
சின்னத்திற்கு அருகே உள்ள 
பட்டனை அழுத்தி உங்களுடைய 
வாக்குகளை பதிவு செய்யுங்கள். 
எதிரில் உள்ள பட்டனை நீங்கள் 
அழுத்தினால் இலவசம் வரும்! 
ஆனால் வராது! 
அப்புறம் திண்டாட வேண்டியதுதான்!” 
என்றார்.
மீதி இருக்கிற அனைத்து 
வேட்பாளருக்கும் அடி இருக்கு:
இந் நிலையில் ஆயிரம் விளக்கு 
தொகுதியில் திமுக வேட்பாளருக்கு
 ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் 
செய்து பேசுகையில், விஜயகாந்த் 
பிரச்சாரம் செய்யும்போது, 
அதிமுகவினர் அவர்களது கட்சி 
கொடியை தூக்கி காட்டினார்கள். 
அவர்களை பார்த்து கொடியை 
இறக்குங்குங்கடா. சொல்லிக்கிட்டே
 இருக்கிறேன். இங்க இருக்கிறவன் 
எல்லாம் முட்டாளா. நீங்க மட்டும் 
அறிவாளியா என்கிறார். இதுக்கு 
அதிமுகவினர் கொடியை இறக்க 
முடியாது என்று சொன்னதும், நான்
 என் கட்சிக்குதான்
 பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் 
என விஜயகாந்த்
 சொல்கிறார். கூட்டணி கட்சி
 என்றால் என்ன. ஒருத்தருக்கு 
ஒருத்தர் ஓட்டு கேட்க வேண்டும்.
 அதுதான் கூட்டணி. ஆனால் நீ வேற,
 நான் (விஜயகாந்த்) வேற என்று 
சொல்லும் நீ ஏன் கூட்டணி
சேர்ந்திருக்க?. அந்த கூட்டணி 
எதுக்கு உனக்கு?. அந்த கட்சியில 
அந்த ஆள தப்பா சேர்த்துட்டாய்ங்க.
 ஒரே அக்கப் போரு. தேமுதிக 
வேட்பாளர் பெயரை தப்பா 
சொல்லிருக்கார் இந்த ஆளு. 
வேட்பாளர் பெயர் பாஸ்கர். இந்த
 ஆளு பாண்டியன் என்று 
சொல்லிருக்காரு. அண்ணே 
அண்ணே என் பெயர் பாஸ்கர் 
இல்லையென சொல்லியிருக்கிறார்.
 நான் வைக்கிறது தான்டா பேருனு 
சொல்லி அவர் வாயிலேயே குத்தி 
ரத்தம் கொட்ட வச்சுட்ட. மீதி
 இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும்
 அடி இருக்கு.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.