உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/03

இந்தியா உலகக் கோப்பையை வென்றது

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாம்பியன் அணியானது. கேப்டன் தோனி குலசேகரா வீசிய கடைசி பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்தது வெற்றிக்கான அடியாக அமைந்தது.

கபில்தேவுக்குப் பிறகு தோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தற்போது தோனி தலைமையில் மீண்டும் உலக சாம்பியன்களானது.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.

மேலும் முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் பிரதான நாட்டின் அணி கோப்பையை வென்றுள்ளது. இலங்கை 1996ஆம் ஆண்டு வெல்லும்போது அது போட்டியை நடத்தும் துணை நாடாகத்தான் இருந்தது.

தோனி 79 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 91 ரன்கள் எடுத்து தன் வாழ்நாளின் மிகச்சிறப்பன இன்னிங்சை மிகப்பெரிய தருணத்தில் அடித்தார்.

சச்சின் டெண்டுல்கரை வீரர்கள் அனைவரும் தூக்கியபடி மைதானத்தை வலம் வந்தனர். இந்திய வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்தனர். வெடி முழக்கம் காண்கிறது இந்தியா.

துவக்க ஓவரில் சேவாக் 0-இல் ஆட்டமிழக்க சற்றே அமைதி ஆனது. அதன் பிறகு சச்சினையும் மலிங்கா வீழ்த்திய பிறகு இலங்கை உண்மையில் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைத்து விட்டதாகத்தான் தெரிந்தது.

ஆனால் கம்பீரும், கோலியும் அபாரமாக விளையாடி 31/1 என்ற நிலையிலிருந்து 114 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தினர். அப்போது கோலி 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து தில்ஷான் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்தார். தில்ஷான் ஓவர் ரியாக்ட் செய்தார்.

கம்பீருடன், யாரும் எதிர்பாராத நிலையில் தோனி களமிறங்கினார். கேப்டனாக பொறுப்பை தன் தலையில் சுமந்தார் தோனி. இருவரும் இணைந்து 21 ஓவர்களில் 109 ரன்களைச் சேர்த்தனர். இந்தியா 41.2 ஓவர்களில் 223 ரன்கள் இருந்தபோது கம்பீர் 122 பந்துகளில் 97 ரன்கல் எடுத்து அபாரமாக விளையாடி வந்த நிலையில் சதம் எடுப்பதற்கு அவசரம் காட்டி பெரேரா பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பவுல்டு ஆனார். அப்போது இந்தியாவுக்கு சற்றே நெருக்கடி ஏற்படும் போல் இருந்தது.

ஆனால் தோனி அதன் பிறகு பெரேராவின் ஒரு பந்தை கவர் திசைக்கு மேல் மிகப்பெரிய சிக்சரை அடிக்க யுவ்ராஜ் சிங் ஒரு புல்ஷாட்டை ஆட நிலைமை சகஜமானது

1 கருத்து:

  1. துன்பக் கடலில் துவளும் இந்தியா!
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.