உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/10

ஹைய்யா... கிசு கிசுன்னா ஜாலி! - ராணி முகர்ஜி

கிசு கிசு என்றதும் பலர் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்கின்றனர். கப்பலே கவிழ்ந்தது போல சோகமாகிவிடுகின்றனர். அதெல்லாம் கூடாது. கிசுகிசுக்களை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் அப்படித்தான், என்கிறார் ராணி முகர்ஜி. 



பிரபல இந்தி நடிகை ராணிமுகர்ஜி. இவரையும் இயக்குநர் / தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவையும் இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. இது பற்றி பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "கிசுகிசுக்களை பார்த்து நடிகைகள் விரக்தியடையக் கூடாது. ஐஸ்வர்யா ராய் பற்றி ஆரம்பத்திலேயே எக்கச்சக்க கிசுகிசுக்கள் வந்தன. அவர் திருமணத்துக்கு பிறகும் கிசுகிசு பரப்பினர். அவர் பொறுமையாகவே இருக்கிறார்.

ஆனால் சிலர் இவைகளைப் படித்து மனம் உடைந்து போகிறார்கள். கப்பலே கவிழ்ந்து விட்டது போல அழுகிறார்கள். ஆனால் நான் வருத்தப்படுவதில்லை.

கிசுகிசுக்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். பெரிய நடிகர்களோடு இணைத்து என்னைப்பற்றி வரும் செய்திகளை பார்த்து மகிழ்ச்சி அடைவேன். யாஷ் சோப்ரா மகன் ஆதித்ய சோப்ராவுடன் நட்பு என்றும் பிறகு அது காதலாக மலர்ந்தது என்றும் எழுதினார்கள்.

எனக்காகவே அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் செய்தி வந்தது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. மகிழ்ச்சிதான். இப்படியும் ரசிகர்களை மகிழ வைக்க முடிகிறதே என்று நினைக்கையில் சந்தோஷப்படுகிறேன்.

இன்னொன்று என் தனிப்பட்ட உறவு பற்றி நான் வெளியில் பேசுவதில்லை. காரணம், நானும் என்னோடு தொடர்புடையவரும் தவிர மூன்றாவதாக ஒருவரும் பாதிக்கும் சூழல் உள்ளதால், இந்த உறவை ரகசியமாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்," என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.