உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/17

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''


'ஹே... அழகிய தீயே’ என்று பார்த்த மாத்திரத்தில் பாடத் தோன்றும் அதே அழகு ரீமா. தேகத்தில் இன்னும் பாலீஷ் தூக்கல். ஆனால், துடுக்குப் பேச்சு மட்டும் அப்படியே டிட்டோ!


'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''


''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது. ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''



''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''


''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''


''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''


''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''


''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''


''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே. ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன். அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.