உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/12

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

ஆசிரியர் தலையங்கம்-வலம்புரி 

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்ற இந்த சினிமாப் பாடல் பலரின் உள்ளத்தை தொட்ட பாடல்.இந்தப் பாடல் வெளிவந்தது முதல் அதனை சதா உச்சரிக்கும் இரசிகர்கள் ஏராளம். இப்போது தமிழகத் தேர்தலிலும் இந்தப் பாடலே முதன்மை பெற்றுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இந்தப் பாடலை இசைத்தபடி தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரம் செய்கின்றன. அ.தி.மு.க. கட்சியில் நடந்த மோசடிகளை தி.மு.க. தொலைக்காட்சியில் திரும்பத்திரும்ப ஒளிபரப்புகின்றது.

ஞாபகம் வருதே ...ஞாபகம் வருதே ... இந்தப் பாடலோடு அ.தி.மு.கவின் ஆட்சியில் கலைஞர் மு.கருணாநிதி கைது செய்யப்பட்டமை தொடக்கம் காஞ்சி காமகோடி பீடாதிபதி கைதானது வரை உள்ளிட்ட அடாவடித்தனங்கள் காண்பிக் கப்பட, மறுமுனையில் தி.மு.கவின் ஆட்சியில் நடந்த தினகரன் மீதான தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலியானது முதல் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தி.மு.க.ஆட்சியில் நடக்கும் மோசமான ஊழல்கள் வரை தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் போது இதே பாடல் ஒளிபரப்பப் படுகின்றது.

ஆக, ஒட்டுமொத்தத்தில் இரண்டு ஆட்சியிலும் தமிழகத்தில் மோசடிகளும், நாசங்களும் நடந்ததைக் காணமுடிகின்றது. எதுவாயினும் தமிழக சட்ட சபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிபடைந்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் ‘இலவசம்’ மிகத் தாராளமாக முன்வைக்கப்பட்டுள்ளன.கூடவே எங்கள் பிரச்சினையும் தேர்தல் அர்ச்சனையில் சேர்க்கப்பட்டிருப்பதும் இங்கு நோக்குதற்குரியது.

ஈழத் தமிழினத்தின் பிரச்சினையை தேர்தல் பிரசாரங்களில் முன்வைப்பது வழமையான ஒரு நிகழ்வாக இருப்பினும், ஆட்சிக்கு வந்த பின்பு அதை மறந்து விடுவதும் வழமையானதே. அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரனைத் தவிர வேறு எவரும் ஈழத் தமிழர்களின் நலன் குறித்து சிந்திக்கவில்லை என்பதை அடித்துக் கூறமுடியும்.ஏனையவர்கள் நடித்தார்கள்.அந்த நடிப் பின் தார்ப்பரியம் அறியாமல் நாமும் நம்பியி ருக்க வேண்டியதாயிற்று.

இப்போது நாங்கள் பட்டுவிட்டோம். எங்கள் உறவுகளின் மரண ஓலத்திற்கு அபயம் கொடுக்க எவருமில்லை என்பதை உணர்ந்து விட்டோம்.ஆகையால் தமிழகத் தலைவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் எங்கள் இன்னல்களை, இடுக் கண்களை, இழப்புக்களை, அழிவுகளை உங்கள் இலாபத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் பிச்சை எடுப்பதற்கு எங்கள் பிரச்சி னையை காயமாகக் காட்டாதீர்கள்.உங்களால் முடிந்தால் எங்களுக்காக ஏதே னும் செய்யுங்கள். முடியவில்லையாயின் விட்டு விடுங்கள். உங்களுக்கு ஞாபகம் வருவதுபோல எங்களுக்கும் உங்கள் தொடர்பில் நிறைய ஞாபகங்கள் உண்டு.

2 கருத்துகள்:

  1. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  2. அவர்களை நம்புவது போல் எங்களை இடைபோட்டு விட்டார்கள் இவர்களின் பித்தலாட்டம் வெளிப்பட்டுவிட்டது முள்ளிவாய்க்காலுடன் இனியும் நாம் யாசகம் கேட்பதா இவர்களிடம்.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.