உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/10

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

ஆசிரியர் தலையங்கம்-வலம்புரி 
ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

ஆ! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

1 கருத்து:

  1. பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகள் அழிக்கபட்டதை ஈழத்தமிழர்கள் அழிக்கபட்டதாக வலம்புரி விசமத்தனமாக எழுதுவது பத்திரிக்கை சுதந்திரம் அல்ல. எந்த நாடும் பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பதை அனுமதியாது. இலங்கை அரசு வலம்புரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.