உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/16

நாந்தான் அப்போவே சொன்னேய்யா-கலைஞர்

இத்தனை பிரமாண்ட காட்சியமைப்புகளை திரையில் கொண்டுவர முடியுமா என்று எல்லோரும் மூக்கில் விரல் வைத்து கொண்டிருக்க படத்தின் க்ளைமாக்ஸ் பற்றிய பரபரப்பை கிளப்புகிறார்கள். படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக முன்னேறிவரும் சூழலில், பொன்னர் சங்கர் படத்தின் க்ளைமாக்ஸ் கொங்குச் சீமைக்கு தெய்வகுத்தம் என்று முதல்வர் கலைஞரிடம் சிலர் பிரச்சனயை கொண்டு வந்திருகிறார்களாம். 

நாந்தான் அப்போவே சொன்னேய்யா�! கேட்டியா என்று கலைஞர், தியாகராஜனிடம் கோபபட்டதாக தகவல் கிடைக்கிறது. வாய்மொழி வரலாற்றுக் கதைப்படி பொன்னர் சங்கர் இருவருமே வீரமரணத்தை எய்திவிடுவார்களாம். பொன்னர் சங்கரின் உயிர்த்தியாகம்தான், அந்த மன்னனையே வாழவைத்துக்கொண்டிருகிறது என்று நம்பும் பலரும் பொன்னர் சங்கர் உயிரோட இருக்கிறமாதிரி காட்டி வரலாறை மாத்திட்டீங்களே இது தெய்வகுத்தம் என்று பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்று தகவல் கிடைக்கிறது.

தியாகராஜன் தரப்பில் விசாரித்தால் பொன்னியின் செல்வனும் வரலாருதான். அதை நாவலாக எழுதியபோது கல்கி தேவையான அளவு கற்பனையை கலக்கவில்லையா? என்கிறார்கள். உண்மையில் ஏற்கனவே மணவாழ்வில் நொந்துபோய் இருக்கும் தனது மகன் பிரசாந்துக்கு மறுவாழ்வு தரும் ஒரு படத்தில் தனது மகனை இறப்பதுபோல் காட்ட தியாகராஜன் விரும்பவில்லை என்கிறார்கள் அவரது உதவி இயக்குனர் வட்டாரத்தில்.

கதையை மாற்றிவிட்டாரே என்றுதியாகராஜன் மீது கலைஞர் கோபமாக இருக்கும் நேரத்தில் இசைஞானி இளையராஜாவும் பொன்னர் சங்கர் படத்தினால் செம அப்செட்டில் இருக்கிறாராம். இது என்ன புதுபிரச்சனை என்றுகேட்டால் இந்த கதை கொங்கு வேளாளர் சமூகத்து மக்கள் தெய்வமாக கும்பிடும் பொன்னர் சங்கர் பற்றியது. இதற்காக இந்த சமூகத்து மக்களின் பெருமைகளை பாடுவது போல ஒரு பாடலைதானே எழுதி தானே பாடியும் இருந்தாராம் ராஜா.

தேர்தலுக்கு முன் படத்தை வெளியிடும்படி சொன்ன கலைஞருக்காக படத்தை டிரிம் பண்னியபோது இந்த பாடலை படத்திலிருந்தே தூக்கிவிட்டார் தியாகராஜன். இதனால்தான் ராஜா அப்செட் என்கிறார்கள். படத்தின் இசைக் குறுந்தகடுகள் கூட இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது தனிக்கதை.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.