உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/07

ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆர்யா,சமீரா !!

லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘வேட்டை’. ஆர்யா, சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து வந்தது. 

திட்டமிட்ட நாளுக்கு முன்பே முதல் ஷெட்யூல் முடிந்ததால் அங்கிருந்து வியாழக்கிழமை சென்னை திரும்பினர். ஆர்யாவுக்கும் சமீரா ரெட்டிக்கும் மதுரையில் இருந்து சென்னை வர விமான டிக்கெட் எடுத்திருந்தனர்.

முதல் நாள் ரயிலில் தயாரிப்பாளர் போஸ், லிங்குசாமி ஆகியோர் செல்ல முடிவு செய்திருந்தனர். தாங்களும் ரயிலில் வருகிறோம் என்று ஆர்யாவும் சமீராவும் கூறினார் . 

இதையடுத்து காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் ஏறி வந்துகொண்டிருந்தனர். ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருக்க ஆர்யா, தொப்பி அணிந்திருந்தார். 

சமீரா தலையில் ஒரு துணியை போட்டிருந்தார். காலையில் எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கினால் ரசிகர்கள் தொந்தரவு இருக்கும் என்று தாம்பரத்தில் இறங்க முடிவு செய்திருந்தனர். 

இதையடுத்து ஆர்யாவின் கார் தாம்பரத்தில் காத்திருந்தது. வெள்ளிக்கிழமை காலை 7.30&க்கு ரயிலில் இருந்து இருவரும் இறங்கினர். அப்போது திடீரென்று ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு சுற்றி வளைத்தனர். 

அவர்களிடம் இருந்து வெளியேற இருவரும் சிரமப்பட்டனர். ஆர்யாவின் டிரைவரும் நண்பர் ஒருவரும் உள்ளே வந்து இருவரையும் ரசிகர்களிடம் இருந்து மீட்டனர். இச்சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.