உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/09

விஜய்யை அழைத்து சிம்பு கொடுத்த அதிர்ச்சி!சிம்பு, ஜெய் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் `வேட்டை மன்னன்`. இதன் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தை ஒட்டிய பின்னி மில்ஸில் நடைபெற்று வருகிறது. 

அதே பின்னி மில்ஸில் இன்னொரு பகுதியில் விஜய் நடித்து வரும் `வேலாயுதம்` படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி ஜெய்க்கு பிறந்த நாள். சிம்புவும், ஜெய்யும் நடித்து கொண்டிருக்கும் போது சிம்புவிற்கு ஜெய்யின் பிறந்த நாள் ஞாபகம் வர கேக் வெட்டி கொண்டாட தீர்மானித்தார். 

பக்கத்திலேயே விஜய்யின் படப்பிடிப்பு நடைபெறுவதால் விஜய்யும் வந்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து தனது ஆசையை வெளிப்படுத்த விஜய் கலந்து கொண்டு ஜெய்யின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இது குறித்து ஜெய் கூறியுள்ளது " பல வருடங்களாக நான் உடன் நடிக்க ஆசைப்பட்ட எனது ஸ்பெஷல் ஹுரோவான சிம்புவுடன் வேட்டை மன்னன் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடன் நடிப்பதே எனது பிறந்த நாள் பரிசாக இருந்தது. 

ஆனால் சிம்பு எனக்கு இளைய தளபதி விஜய்யை அழைத்து அதைவிடப் பெரிய இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.. என் அபிமான நடிகர் இளைய தளபதியுடன் என் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு என் பிறந்த நாள் பரிசாக அடுத்த ஆனந்த அதிர்ச்சி அளித்தார். என் பிறந்த நாள் பற்றி அஜீத்திடம் அவர் சொல்ல, மங்காத்தா படப்பிடிப்பில் இருந்து அஜீத் என்னை போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். 

எனது வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்த நாளாக இது அமைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தவர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய் பிறந்த நாள் மூலம் தமிழ் நாயகர்கள் ஒன்று கூடியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.