உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/18

காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.