உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/02

பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடனை பூர்த்தி செய்த பெண்


யாழ்.மாவட்டம், தென்மராட்சிப் பிரதேசத்தின் கைதடியில் உள்ள ஆலயமொன்றில் வயதான குடும்பப் பெண்ணொருவர் பறவைக் காவடி எடுத்துத் தனது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்துள்ளார்.
கைதடி மத்தி, உதயசூரியன் வீதியைச் சேர்ந்த திருமதி சங்கரன் சரசுவதி (வயது 59), என்பவரே இந்த நேர்த்திக்கடனை பூர்த்தி செய்துள்ளார்.
மூர்த்தியாவத்தை ஆலயத்திலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கைதடி வடக்கு பாலாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு கொழுத்தும் வெயிலின் மத்தியிலும் இந்தப் பறவைக் காவடியை  அவர் எடுத்திருக்கிறார்.
அந்தப் பகுதியில் முதன் முதலாகப் பெண்ணொருவர் பறவைக்காவடி எடுத்திருக்கின்றார் என்ற செய்தியைக் கேட்டதும் பல இடங்களில் இருந்தும் கண்டுகளிக்க  பெருமளவான மக்கள் வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் வழமையில் ஆண்களே பறவைக்காவடி எடுப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.