உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/12

ஐ.நா.வின் தூதராக நடிகர் விக்ரம்

ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் பிரிவின் (ஐ.நா.வின் மனித குடியேற்ற திட்டம்) இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஆசியாவில் இருந்து நடிகர் விக்ரம் தேர்வாகியுள்ளார். கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23வது நிர்வாக் குழு கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு நேற்று துவங்கியுள்ள இக்கூட்டம் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுபற்றி நடிகர் விக்ரம் நைரோபியில் இருந்து கூறும்போது,

‘’பெருமைக்குரிய ஐ.நா.அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். 

ஐ.நா.வின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம், ஆரோக்கியமான நகர்ப்புற முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதுதான். ஐ.நா.வின் நோக்கம் நிறைவேற உதவுவேன்’’ என்றார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.