உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/21

அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு போட்டியாக சம்சுங்


கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளின் சந்தையில் நிறுவங்களுக்கிடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு பாவனையாளர்கள் மத்தியில் என்று வரவேற்பு இருக்கவே செய்கின்றது.
அப்பிளின் ஐ-போன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஐ-பேட் கணனிகள் ஆகியன சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவற்றுக்குத் தகுந்த போட்டியளிக்கும் வகையில் மற்றைய நிறுவனங்களும் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்திவருகின்றன.
இதில் செம்சுங் குறிப்பிடத்தக்கதாகும்.
அப்பிளின் உற்பத்திகளை போல சம்சுங்கும் தனது கெலக்ஸி வரிசையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தனது தயாரிப்புகளைப் போலவே சம்சுங் நிறுவனம் தனது உற்பத்திகளை தயாரித்துள்ளதாக அப்பிள் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.
தனது உற்பத்திகளை ஒத்ததாகவே சம்சுங் தனது பொருட்களை வடிவமைத்துள்ளதாகவும், அதன் வன்பொருட்கள் மற்றும் யூசர் இன்டர் பேஸ் ஆகியனவும் அவ்வாறே உள்ளதாகவும் அப்பிள் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் பொதிசெய்தல் முறையிலும் சம்சுங் தம்மையே நகல் செய்வதாகவும், இது ஒரு காப்புரிமை மீறலெனவும் அப்பிள் தெரிவிக்கின்றது. __

2 கருத்துகள்:

 1. எல்லா தொழிலிலும் போட்டியிருக்கிறது...

  சுமுகமாக முடிந்தால் சரி..

  பதிலளிநீக்கு
 2. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
  கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.