உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/16

நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு-சினிமாவாகிறதுபழம்பெரும் நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குகிறார் டைரக்டர் ராஜ்மோகன். தனது கோடிக்கணக்கான சொத்துக்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக கொடுத்துவிட்டு ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை காஞ்சனா. தனது வாழ்க்கையை ஒரு விமான பணிப்பெண்ணாக ஆரம்பித்தவர், அதன்பின் நடிகையாகி பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்வாங்கு வாழ்வதும் பின் அந்த வாழ்க்கையை அர்ப்பணிப்பதும் எளிதான விஷயமல்ல. இந்த விஷயத்தை மையமாக கொண்டு ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார் ராஜ்மோகன். இவர் ராஜ்கிரண் நடித்த பகடை படத்தை இயக்கியவர்.

மௌனம் பேசியதே, காதல் கிசுகிசு, குண்டக்க மண்டக்க போன்ற படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். பாலுமகேந்திராவின் ஏணிப்படிகள் மாதிரி பார்ப்பவர்களின் இதயத்தை ஒரு நிமிஷம் உலுக்கிவிட்டு போகவிருக்கும் இந்த கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்த ராஜ்மோகன், சோனியா அகர்வாலிடம் கதையை சொன்னாராம். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எந்த பிரிவில் பணியாற்றும் பெண்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதுவே ஒரு நடிகையின் வாழ்விலும் நடக்கிறது. அவள் என்னாகிறாள் என்பதுதான் இந்த கதையின் முடிச்சு. இதை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் சோனியா அகர்வால்.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.