உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/18

சோப்பு விளம்பரம் கோர்ட்டுக்குப் போன தமன்னா!

தான் நடித்த சோப்பு விளம்பரத்தை ஒப்பந்த காலத்துக்குப் பிறகும் வெளியிட்டதால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகை தமன்னா. இந்த வழக்கில் குறிப்பிட்ட விளம்பரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. இவர் நடித்த சோப்பு விளம்பர படம் ஒன்று சமீப காலம் வரை வெளியிட்டு வந்தது. 

இதுதொடர்பாக நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் புதுச்சேரியைச் சேர்ந்த `பவர் சோப்பு` விளம்பரத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொடுத்தேன்.

இப்போது விப்ரோ என்ற சோப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். பவர் சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் வெளியிட்டு வருவதால், நான் புதிய விளம்பரத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த விளம்பரத்தில் நான் நடித்ததை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து மேற்கண்ட விளம்பர படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். மேலும் பவர் சோப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.