உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/11

வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன் -நடிகர் வடிவேலு

வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன் என, நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வடிவேலு ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் குறித்த புகாரை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் தொடர்வது பற்றி திமுக தலைவர் கலைஞருடன் வடிவேலு சிதம்பரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர், பொதுமக்கள் தயவால் எனக்கு எந்த பயமும் இல்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த டெபாசிட் இழப்பார். வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன். உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.

1 கருத்து:

  1. வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டலா? இப்படியே சொல்லி சொல்லி அவரையும் பெரிய அரசியல் தலைவர் ஆக்கிடுவாங்க போல... அவ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.