உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/15

புதுவருட சந்தோசத்தில் வேட்டி அவிழ்ந்து விழ ரோட்டில் கிடக்கும் யாழ். குடிமகன்! (காணொளி, பட இணைப்பு)

போர் ஓய்ந்த ஒரு தேசத்தில் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு பிரதேசத்தில் எப்படியெல்லாம் கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுமோ அதற்கு ஒரு நேரடி உதாரணம் இன்றைய யாழ் குடாநாடு. 

படத்தைப் பார்த்ததும் சடலம் என்று நினைத்துவிடாதீர்கள் மதுவுக்கு அடிமையாகி சடலமாக மாறும் தினத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர்.

புத்தாண்டு பிறப்பதற்கு மூன்று தினங்கள் முன்பாகவே வரவேற்கப் புறப்பட்ட இந்த யாழ் வாசி மதுபோதையின் உச்சத்தில் யாழ். இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக யாழ் மண்ணின் மகிமையை கெடுக்கும் வகையில் வேட்டி இடுப்பிலிருந்து அவிழ்ந்து விழ வீதியில் விழுந்து கிடக்கிறார்.
இன்று யாழ். குடாநாட்டில் அதிகம் வாடிக்கையாளர்கள் கூடும் இடமாக மதுபான விற்பனை நிலையங்கள் மாறியுள்ளன. கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள் என சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. 

தமிழர்களின் கலாசாரம் பண்பாடு வளர்க்கப்படும் யாழ். மண்ணில் இன்று சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துவருவதும் யாழ் வீதிகளில் சாதாரணமாகவே மதுபோதையில் நபர்கள் விழுந்துகிடக்கும் காட்சிகளும் சமுக அக்கறை கொண்ட உள்ளங்களை ஒரு கணம் உறைய வைத்தேயாகும்.

இவ்வேளையில் சமுக சீர்கேடுகள் அதிகரிக்காமல் இருக்கவும் அதனை தடுக்கவும் எமது மக்கள் விழிப்புடன் சிந்தித்துச் செயற்படவேண்டியது கட்டாயமாகும்
0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.