உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/27

கெட்டுப் போன சிம்பு : பாவனா பாய்ச்சல் : விரட்டிய நயனதாரா

சிம்பு கெட்டவன் என்று பெயர் எடுத்து விட்டார். எனவே அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று பாவனா பரபரப்பாக கூறியுள்ளார். கை நிறையப் படங்களுடன் முதலிடத்தை நோக்கி படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பவர் பாவனா. 

மாதவனுடன் ஆர்யா, பரத்துடன் கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்துள்ள பாவனாவை கெட்டவன் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் பாவனா முடியாது என்று கூறி விட்டாராம். 

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் சிம்புவை வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார். சிம்புவுடன் நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அவற்றை வெளியிடுவது சிம்புதான். ஆனால் நான் அவருடன் இணைந்து நடிக்க முடியாது என்று கூறி விட்டேன். 

சிம்புவுக்கு இப்போது நல்ல பெயர் இல்லை. நயனதாராவுடன் சிம்பு கொடுத்த முத்தப் படங்கள் வெளியாகி அவரது பெயரை கெடுத்து விட்டன. அவருடைய இமேஜும் சரிந்து விட்டது. ஒருவர் நல்ல பெயரை சம்பாதிப்பது எப்படி கஷ்டமோ, அதேபோல கெட்ட பெயரை சம்பாதித்து விட்டு, மீண்டும் நல்ல பெயர் எடுப்பதும் கஷ்டமானது தான். சிம்பு கெட்டவராகி விட்டார். 

மீண்டும் நல்லவராவது கஷ்டமான காரியம். சென்னை வரும்போது வந்து பாருங்கள் என்றார் சிம்பு. ஆனால் நான் அவருடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறி விட்டேன். எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.ஆர்யா படத்தில் கூட, உடலோடு ஒட்டியபடி உள்ள பனியனை அணிந்து நடிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் முடியவே முடியாது என்று கூறி விட்டேன். கவர்ச்சியாக நடித்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். கவர்ச்சியைக் காட்டி, உடலை வெளிக்காட்டி முதலிடத்தைப் பெறத் தேவையில்லை என்று பொறிந்து தள்ளியுள்ளார் பாவனா. 

கோபிகா, நயனதாரா இருவருமே பாவனாக்கு நல்ல தோழிகள், நெருங்கிய தோழிகள் என்பது தெரியும்தானே! 

நயனதாரா சிம்புவை விரட்டிய நயனதாரா!

நயனதாராவைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்த சிம்புவை, செக்யூரிட்டியை விட்டு வெளியேற்றி விட்டார் நயனதாரா. சிம்பு, நயனதாரா விவகாரம் இப்போதைக்கு முடியும் என்று தெரியவில்லை. 

வார்த்தைகளை இரு தரப்பும் தாறுமாறாக விட்டு விட்டனர். இப்போது மீண்டும் நயனதாராவுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வம்பாடுபடுகிறாராம் வல்லவன் சிம்பு. சமீபத்தில் ஹைதராபாத்துக்குப் போன நயனதாரா அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நயனதாராவை மீட் பண்ண முயற்சித்தார். 

அவர் வருவதை அறிந்த நயனதாரா அடித்துப் பிடித்து கேரளாவுக்கு ஓடி விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனுஷ�டன் இணைந்து புதிய படத்தில் நடிக்க நயநனதாரா ஒத்துக் கொண்டுள்ளார். செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் இயக்கும் படம் இது. 

இதன் போட்டோ செஷனுக்காகவே சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனது வருகையை படுரகசியமாக வைத்திருந்தார் நயனதாரா. ஆனால் தனது உளவாளிகள் மூலம் அதை மோப்பம் பிடித்து விட்டார் சிம்பு. பார்க் ஹோட்டலில்தான் நயனதாரா தங்கியுள்ளார் என்பதை அறிந்த சிம்பு நேராக அங்கு போனார். 

தான் யாரையும் பார்க்க விரும்பவில்லை, எனவே யாரையும் எனது அறைக்கு அனுமதிக்காதீர்கள் என்று ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி வைத்திருந்தார் நயனதாரா. இந்த நிலையில் சிம்பு வந்து நிற்கவே, என்ன செய்வது என்று ஹோட்டல் நிர்வாகத்திற்குக் குழப்பம்.

நயனதாராவைத் தொடர்பு கொண்ட அவர்கள், சிம்புவை அனுமதிக்கவா என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்டு கடுப்பான நயனதாரா, நான்தான் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று சொன்னேனே! யாரையும் பார்க்க மாட்டேன், அவரை திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனால் ஸாரி சொல்லியுள்ளனர் செக்யூரிட்டிகள். ஆனால் அதை மீறி நயனதாராவின் அறைக்குச் செல்ல முயன்றுள்ளார் சிம்பு. ஆனால் நயனதாராவோ தனது முடிவில் பிடிவாதமாக இருக்கவே, செக்யூரிட்டிகள் சிரமப்பட்டு சிம்புவை அங்கிருந்து வெளியேற்றினார்களாம். மழை விட்டுடுத்து, தூவாணம் எப்போ நிக்குமோ

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.