உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/22

அஜீத் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

அஜீத் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மங்காத்தா படத்தின் பாடல் வெளியீடு சில பல பிரச்சனைகளால் மீண்டும் தள்ளிபோகிறது. க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத், அர்ஜூன், த்ரிஷா, அஞ்சலி, லெட்சுமிராய் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் மங்காத்தா படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தை அஜீத் பிறந்தநாளான மே-1ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் படத்தின் சூட்டிங் நிறைவு பெறாததால் படம் ‌தள்ளி போகும் என்று ஏற்கன‌வே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அஜீத்தின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அஜீத் பிறந்தநாளில் படத்தைதான் ரிலீஸ் செய்யமுடியவில்லை ஆடியோவையாவது ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணியிருந்தனர். இப்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் முடியாதது மற்றும் சில, பல பிரச்சனைகளால் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளில் ஆடியோ ரிலீசாகாது என்று கூறப்படுகிறது.

தற்போது மும்பையில் முகாமிட்டு இருக்கும் மங்காத்தா டீம், அங்கு சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து படத்தின் ஆடியோவையும், ரிலீசையும் ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

அஜீத் பிறந்தநாளில் படம்தான் ரிலீசாகவில்லை, ஆடியோ ரிலீசையாவது தல பிறந்தநாளுடன் சேர்த்து சிறப்பாக கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு இப்போது இந்த செய்தி வருத்தத்தை அளித்துள்ளது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.