உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/10

இதோ இன்னொரு நமீதா

மாப்பிள்ளை மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள புதுப் பொண்ணு ஹன்சிகா மோத்வானி, இன்னொரு நமீதாவாக கலக்குவார் என்று கோலிவுட்டில் ஏக மனதாக கூறுகிறார்கள்.மாப்பிள்ளை வந்து 2 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே கை நிறையப் படங்கள் ஹன்சிகாவைத் தேடி வந்து அவரை திக்குமுக்காட வைத்து விட்டது.

விஜய்யுடன் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என பிசியாக இருக்கிறார். தெலுங்கிலும் ஹன்சிகாவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இப்படி இவரைத் தேடி நிறையப் பட வாய்ப்புகள் வந்துள்ளதால், ஏற்கனவே பீல்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தமன்னா போன்றவர்களின் மார்க்கெட் பெரும் ஆட்டம் கண்டுள்ளதாம்.

பார்ப்பதற்கு நெய்யினால் செய்யப்பட்ட பெரிய சைஸ் பொம்மை போல கொளுக் மொளுக்கென்று இருக்கிறார் ஹன்சிகா. ஆனால் நடிப்புதான் சுட்டு்ப போட்டாலும் வராது போலத் தெரிகிறது.

எனவே இவர் நமீதா ரேஞ்சுக்கு கவர்ச்சியை பிரதானமாகக் கொண்டு கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்சிகாவுக்கு முன்னணி ஹீரோக்களின் ஆசிர்வாதம் பூரணமாக இருப்பதால் அத்தனை ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் ஹன்சிகாவின் பேரெழுச்சியைப் பார்த்து முன்னணி நாயகிகள் பெரும் பீதியுடன் இருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.