உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/23

வேம்பின் மருத்துவக் குணங்கள்

* வேப்ப இலைக் கொழுந்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொன்றுவிடும்.

* வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.

* Influenca (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.

* யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.

* கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

3 கருத்துகள்:

  1. வேம்பு நல்லதுதான் என்ன செய்வது புலம் பெயரும்போது கொண்டுவர முடியவில்லை !வேம்பில் ஊஞ்சல் கட்டியாடியதுதான் ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
    http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் .
    முகப்பருக்களுக்கும் வேம்புப்பற்று
    இட்டால் அவை குறையும் . அனுபவ உண்மை.
    இன்று தான் கண்டேன் , தங்கள் வலைபதிவு பட்டியலில்
    என் தளமும் இருந்தது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் யாழ்.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.