உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/04

செயற்கை இதயம் தயார்! வெற்றி நோக்கிய சாதனை.

மனித இதயத்தை ஆய்வு கூடங்களில் உருவாக்கும் ஒரு புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான இருதய நோயாளிகளுக்கு இது ஒரு சுப செய்தியாக அமையவுள்ளது. 

செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இதயம் ஒரு சில வாரங்களில் துடிக்க ஆரம்பிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது ஒரு பாரிய ஆராய்ச்சித் திட்டத்தின் முதலாவது படியாகும். 

இதைத் தொடர்ந்து ஈரல், நுரையீரல், சிறுநீரகம் என்பனவற்றையும் ஆய்வுகூடங்களில் உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

நன்கொடையாக வழங்கப்படும் மனித உறுப்புக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைக்கலங்களில் இருந்தே செயற்கை இருதயம் உருவாக்கப்படுகின்றது. இதயத்தோடு தொடர்புடைய ஏனைய திசுக்களோடு இவை சேர்க்கப்பட்டு அவற்றுக்கு ஊசி மூலம் ஏனைய இணைப்புக் கலங்கள் அனுப்பப்பட்டு வளரவிடப்படுகின்றன. 

இந்த முறையின் மூலம் ஆரோக்கியமாக இருதயக் கலங்களையும் கட்டமைப்பையும் உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதயம் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றது. 

அடுத்த ஓரிரு வாரங்களில் அது துடிக்க ஆரம்பிக்கும் என்று நம்புகின்றோம் என்று அமெரிக்காவின் மினியாபோலிஸ் பிராந்தியத்தின் மினசோடா பல்கலைக்கழக மருத்துவ மீள் ஊக்கமளித்தல் பிரிவின் பேராசிரியர் டொக்டர். டொரிஸ் டேலர் தெரிவித்துள்ளார். 

முழு அளவில் செயற்படக்கூடிய இதயம் ஒன்றை உருவாக்குவதில் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மனித உறுப்பு மாற்றத்துக்கான அனைத்து உறுப்புக்களையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் என்னால் நிச்சயம் கூற முடியும் என்று அவர் மிகவும் உறுதியாகக் கூறியுள்ளார். 

தற்போது இதய மாற்று சிகிச்சைக்கு ஆளாகின்றவர்கள் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவதற்காக வாழ்நாள் முழுவதும் மருந்துகளைப் பாவிக்க வேண்டியுள்ளது.இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

ஆனால் ஒரு நோயாளியின் சொந்த இணைப்புக் கலங்கள் மூலம் உருவாக்கப்படும் செயற்கை இதயங்கள் மூலம் இந்தப் பிரச்சினையை தடுக்கலாம். 

மேலும் ஒருவரின் சொந்தக் கலங்கள் மூலம் உருவாக்கப்பட்டு பொருத்தப்படும் இதயத்தை நிச்சயம் அவரின் உடல் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.