உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/29

அனுஷ்கா தினமும் 108 தடவை சூரிய நமஸ்காரம்


சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
அனுஷ்கா அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது: தெலுங்கில் ஹிட்டான வேதம் படம் தமிழில் வானம் பெயரில் ரீமேக் ஆகி திரைக்கு வந்துள்ளது. தமிழில் நானே நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறைய பேர் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கிறாயே என்றெல்லாம் விமர்சித்தனர். கதை பிடித்ததால் நடித்தேன். எந்த மொழியில் அப்படத்தை ரீமேக் செய்தாலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்.
யோகா என் வாழ்க்கையோடு ஒரு அங்கமாகி விட்டது. 12 வயதில் இருந்து செய்கிறேன். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்து விடுவேன். சூரிய நமஸ்காரம், ஆசணம் மட்டும் 108 தடவை செய்வேன்.
ஷில்பாஷெட்டி போல் யோகா ஆல்பம் வெளியிடுவீர்களா என்று என்னிடம் கேட்கின்றனர். அந்த அளவு யோகாவில் நான் மேதை இல்லை. இன்னும் ஒரு மாணவி போலவே என்னை உணர்கிறேன்.
தமிழ், தெலுங்கு படங்களில் வித்தியாசத்தை பார்க்கிறேன். தெலுங்கு படங்கள் ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஆனால் தமிழ் படங்கள் யதார்த்தமானவை. அப்படிப்பட்ட படங்களைத் தான் தமிழ் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆர்வம் இருந்தது. தெய்வத்திருமகள் படத்தில் அது நிறைவேறி உள்ளது. சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிக்க அழைத்தனர். நான் மறுத்து விட்டேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். சினிமா எனக்கு முழு ஆத்ம திருப்தியை அளித்து உள்ளது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.