உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/01

“றூமோடு 5 ஆயிரம், றூம் இல்லாமல் 4 ஆயிரம்”


தமிழ் சமூகத்தின் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மக்கள். தமிழ்ர்களின் முழு உருவமாய் விளங்கியவர்கள் யாழ்ப்பாணத்து மக்கள். சிறந்த பெண்னின் இலட்சினைகளைக் கொண்டு விளங்கியவர்கள் யாழ்ப்பாணத்து பெண்கள். உயிருக்காக வாழாது சரித்திரத்திற்காகவும் மானத்திற்காகவும் வாழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத்து மக்கள்.
இவர்கள் எல்லோரும் இப்போது எங்கே? தேடுகின்றன சமூகப்பற்றுள்ள சில உள்ளங்கள். மனதளவால் நோகவும் தம்மைப்போன்ற சிலரிடம் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடவும் மட்டுமே இதுவரை இவர்களால் முடிந்துள்ளது.
யாழ்பாணத்து மக்களை பீனிக்ஸ் பறவைக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது. ஏனெனில், அவர்களை வீழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மறுபடியும் எழுந்து வாழ்ந்து காட்டியவர்கள்.
இந்தகைய சிறப்புமிக்க மக்கள் சமூகம் இன்று தமக்கான தனித்துவத்தை, சிறப்பை இழந்து கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்வேறுபட்ட மாற்றங்களை கண்டுள்ளது. இவற்றில் கலாச்சாரச் சீரழிவுகள் இங்கு நோக்கப்படுகின்றன.
தமிழ் கலாச்சாரத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பு, பிள்ளைகள் வளர்ப்பு அமைப்பு என்பன காணப்பட்டன. தற்காலத்தில் இந்த அமைப்புக்ள் சிதறிவிட்டன. கூட்டுக் குடும்பத்தில் வாழும் போது இளையவர்களை வழிநடத்துவதற்கு தாத்தா, பாட்டி மற்றும் குடும்பப் பெரியர்கள் இருப்பார்கள். இதன் காரணமாக இவர்கள் திசைதிரும்புவது  குறைவு என்று கூறலாம்.
தமது சமூகத்தின் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் வயதானவர்கள் நித்தம் கூறிக்கொண்டே இருப்பார்கள். இவற்றை செவிமடுத்து வளரும் இளம் சமுதாயம் அவற்றின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயற்படும் அதே நேரம் நாமும் அவ்வாறு செயற்பட வேண்டும் என பொறுப்புணர்வுடன் காணப்படும். இவ்வாறான சூழ்நிலையில் பொறுப்பு வாய்ந்த ஒரு சமூகம் கட்டியெழுப்பப்படுகிறது.
ஆனால் தற்காலத்தில் வீட்டில் நடைபெறும் விசேட நிகழ்வுகளின் போது கூட குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் காண்பது கடினமாக இருக்கிறது.
இன்றைய இளம் சமூகம் அமைதி பேணுதல், கீழ்ப்படிதல் போன்ற பண்புகளை தமக்கான சுதந்திரத்தின் மட்டுப்பாடுகள் என கருதுகின்றன. இதன் காரணமாக தாய், தந்தையர் தமது மரியாதையை காக்க வேண்டி பிள்ளைகளிடம் அதிகம் பேசமறுக்கின்றனர். நானே ராஜா நானே மந்திரி என இளைஞர்களும் யுவதிகளும் கனவுலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள்.
இதேவேளை, பெற்றோர்கள் அனைவரும் நிரபராதிகளும் அல்லர். சில குடம்பங்களில் பிள்ளைகளின் தவறுகளுக்கு காரண கருத்தாவாக இருப்பவர்களே பெற்றோர்கள் தான். இதன் உச்சகட்ட பாதிப்பு யாழ் யுவதிகளின் நடத்தைகளில் அவதானிக்க முடிகிறது.
தமது கலாச்சாரத்தை பேணும் ஆடைகளை அணிந்து வந்த பெண்கள் தற்போது ஆங்கில கலாச்சாரத்திற்கு மாறிவிடார்கள், அல்லது அந்த கலாச்சாரத்திற்கு மதிமயங்கி விட்டார்கள் என்றே கூறவேண்டும். இதன் மூலமாக போலியானதொரு கௌரவத்தை உணர்கின்றனர்.
இங்குள்ள பெண்கள் தற்போது அணியும் ஆடைகளின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை யாழ்ப்பாணத்தில் கொழுத்தும் வெய்யிலுக்குப் பதிலாக பனி பொலியத் தொடங்கி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆம், இவர்கள் மிக இறுக்கமான ஜீன்ஸ்ளும் ரீசேட்களும் அணிய வேண்டியதன் அவசியம் தான் என்ன?
ஆதிகால மனிதன் தனது மானத்தை காக்க ஆடை அணிந்தான். பின்னர் காலநிலைக்கு ஏற்ராற் போல் ஆடை அணிந்தான். இன்று எதற்காக ஆடை அணிகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியாகிய விடயம் தான் இளம் பெண்களின் கர்ப்பம். திருமணமாகாத பெண்களின் கர்ப்பங்கள், கருக்கலைப்புக்கள் என யாழ்ப்பாணம் திசை மாறி சுழள்கிறது.
அண்மையில் நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.யா ழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் நிற்கையில் ஒருவர் தன் அருகே வந்து சொன்னாராம். “றூமோடு 5 ஆயிரம், றூம் இல்லாமல் 4 ஆயிரம்” என்று. திடீரென தெரியாத ஒருவர் வந்து இவ்வாறு கேட்டதன் காரணமாக செய்வதறியாது திழைத்த அவர் அருகிலிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிச் சென்றுவிட்டார். இவ்வளவு தூரம் மலிந்து விட்டார்கள் விலைமாதர்கள்.
பழம் என எண்ணி நெருப்பினுள் விழும் விட்டில் பூச்சிகளாய் உலாவருகிறது யாழ்ப்பாண இளம் சமூகம். இந்த நிலையை உணர்ந்து இளைஞர்களும் யுவதிகளும் செயற்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
யாழ் வழிப்போக்கன்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.