பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது.
இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இந்த பங்களா மேல் பறந்தபடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இவருடன் இருந்த சிலரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் பாகிஸ்தான் உதவியை அமெரிக்கா நாடவில்லை. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது
சர்வதேச தீவிரவாதத்திற்கு இனி முடிவு வரும்...
பதிலளிநீக்கு