உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/03

மீட்டலுக்கான சில குறிப்புகள்


மீட்டலுக்கான சிறந்த வழி எது?
•    ஓவ்வொரு மாணவர்களும்;,வெவ்வேறு வழிகளைக் கையாளுவர். ஆனால் சிறந்த வழி எதுவெனில், மீட்டலுக்கான சிறந்த திட்டத்தை தீட்டுவதாகும்.
•    பரிட்சைக்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரியுங்கள்.
•    ஓவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதை கணக்கிடுங்கள். அதன் போது நீங்கள் குறைவாக உள்ள பாடத்தை கவனத்தில் எடுங்கள். நீங்கள் நன்றாக செய்யும் பாடத்தையும் முக்கியமாக கணக்கில் எடுக்க மறக்காதீர்கள்.
மீட்டலுக்கான திட்டத்தை தயாரித்து விட்டீர்களா, அடுத்து?
•    கண்டிப்பாக இருங்கள். அப்போதுதான் எதை பூர்த்தி செய்தீர்கள் என்றும் எதை தவற விட்டீர்கள் என்றும் உங்களுக்கு தெரியவரும்.
•    உங்கள் இல்லத்தில் எங்கிருந்து மீட்டல்களை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள்.
•    உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு அறிவுரையை வழங்குங்கள். படிக்கும் நேரத்தில் வீட்டில் அமைதியை பேணுமாறு.
•    ஓவ்வொரு பாடத்திற்கும் இடையில் இடைவெளி விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சலிப்பு ஏற்படாது.
•    உங்கள் பாட குறிப்புகளுக்கான புதிய மூலங்களை தேடுங்கள். உதாரணமாக, இணையம். இதனால் உங்களுக்கு புதிய குறிப்புகள் கிடைக்கலாம்.
•    குறிப்பிட்ட மீட்டலை பூர்த்தி செய்த பின், உங்களுக்கு ஒரு சிறிய பரிட்சை வழங்குவதாக தீர்மானித்துக்  கொள்ளுங்கள். அதற்காக ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். அது உங்களுக்கு ஒரு தெம்பாக அமையட்டும்.
•    மீட்டலில் முக்கியமான பகுதியாதெனில், பாடங்களை மனனம் செய்வதை விட அந்த பாடத்தை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்
பரீட்சை நெருங்கும் போது எவற்றை பின்பற்ற வேண்டும்?
•    இறுதி நேர மீட்டலை தவிருங்கள்.
•    உங்கள் மீட்டலுக்கான திட்டத்தை நேரத்துடன் பூர்த்தி செய்யுங்கள். மிகுதியாகவுள்ள நாட்களுக்கு ஓய்வு எடுங்கள்.
•    இவ்வாறான நேரத்தில் பரீட்சையில் சித்தியடைவதையோ தோல்வியடைவதையோ பற்றிய சிந்திக்க வேண்டாம். உங்கள் மீட்டல் திட்டம் சரியா இருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். கேள்விகளுக்கான பதில்கள் தானாகவே வரும்.
•    பரீட்சைக்கு முன்பு உங்களை நீங்களே குறிப்பிட்ட கேள்விகளில் பரிசோதித்து பார்க்காதீர்கள். இறுதியாக பரீட்சையில் அமரும் போது, அவசரம் வேண்டாம். பரீட்சை வினாத்தாள் முழுவதையும் வாசியுங்கள்.
•    நீங்கள் பரீட்சையில் சித்தியடைந்து விட்டீர்கள். பரீட்சையில் தோற்றால் நீங்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்து விட்டீர்கள் என்பது அர்த்தமல்ல. நீங்கள் பரீட்சையில் தோல்வியடைந்தமைக்கான காரணம் குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்பதாகும்.
பரீட்சார்த்திகள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகள்
•    மீட்டலை பிற்போடல். இறுதி நேரம் வரை காத்திருத்தல் மற்றும் பிற்போட்டமைக்கு காரணம் தேடல். உண்மையாதெனில், நாட்கள் செல்லச் செல்ல பயமும், பரபரப்பும் தான் ஏற்படும்.
•    மீட்டலுக்கான திட்டத்தை சரியாக தயாரிக்காவிட்டால் மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறு குறித்து கவலை ஏற்படும்.
•    சிலர் அவர்களில் பெற்றோர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு தெளிவு ஏற்படும்.
•    சிலசமயங்களில் உங்களைச் சூழ்ந்து மீட்டல் மற்றும் பரீட்சை தொடர்பான பாரிய பிரச்சனைகள் காணப்படுமாயின், மீட்டலின் போது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பரீட்சை தொடர்பான மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?
•    பரீட்சைக்கு பயப்படுவதை தவிருங்கள். அதை நேர்முகமாக பார்க்க பழகிக்கொள்ளுங்கள்.
•    மன அழுத்தத்தை இனங்காண பழகிக்கொள்ளுங்கள். அத்துடன் அதற்கான காரணத்தையும் கண்டறியுங்கள். அப்போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு யாருடன் பேசினால் உங்கள் மனவழுத்தம் குறையும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அவருடன் பேசுங்கள்.
•    உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்திருப்பார்கள். நீங்கள் தெரிவு செய்த மீட்டலுக்கான வழி உங்களுக்கு ஏற்றதா என பாருங்கள்.
•    பரீட்சை நேரம் பரபரப்பாக இருக்கும் போது சுவாசிப்பதற்க சிலருக்கு கடினமாக இருக்கும் அப்போது சற்று ஓய்வாக இருந்து உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
•    மீள்பார்வையை தெளிவுபடுத்துங்கள்.
•    பரீட்சைக்குப் பின்பு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். இப்பொழுது கடினமாக இருந்தாலும் அது இறதிவரை தொடராது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.