உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/05

மீண்டும் பாக்.கில் புகுந்து தாக்குதல்-அமெரிக்கா எச்சரிக்கை

தேவைப்படுமானால் அபோத்தாபாத்தில் நடந்த தாக்குதலைப் போல மேலும் பல தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்துவோம் என்று அமெரிக்கா மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், அபோத்தாபாத்தில் நடந்த தாக்குதல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. இதுகுறித்து பிறர் விமர்சிப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. தேவைப்பட்டால் இதேபோல மேலும் பல தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்த அமெரிக்கா தயங்காது.

முக்கியத்தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்திருந்தால், அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால் இதை செய்ய அமெரிக்க நிர்வாகம் தயங்காது.

போர்ச் சட்டத்தை எந்த வகையிலும் அமெரிக்கா மீறவில்லை. சர்வதேச சட்டத்திர்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெள்ளைத் துணி காட்டி சரணடைய ஒசாமா முன்வந்திருந்தால் நாங்கள் சுட்டிருக்க மாட்டோம். நிச்சயம் உயிருடன் பிடித்திருப்போம். ஆனால் அவர் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் சுட நேரிட்டது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.