உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/10

நயன்தாரா கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் : சிம்பு

எனக்கு ஏற்ற பெண்ணாக அமையும் போது திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. அதை விட முக்கியமாக, நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருப்பதால் நயனதாரா கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வருமோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.

தனது தங்கைக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர்தான் தனது கல்யாணம் குறித்து யோசிக்கப் போவதாகவும் சிம்பு கூறுகிறார். தனக்குப் பிடித்த, ஏற்ற பெண்ணாக அமைந்தால் கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர் தனது கல்யாணம், காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சரி நயனதாரா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரே என்ற கேள்விக்கு, கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார் சிம்பு. வானம் படத்தின் வெற்றியால் சிம்பு பெரும் குஷியடைந்துள்ளார். அதே சூட்டோடு தற்போது ஒஸ்தி என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தரணி தான் படத்தை இயக்குகிறார். டபாங் படத்தின் ரீமேக்தான் இது. இதில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.