உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/11

நகைச்சுவை நிறைந்த சரித்திர கதையில்-ஜீவா

கோ படத்தின் பிரமிக்க வைக்கிற வெற்றி ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது ரசிகர்களிடத்தில். திருட்டு விசிடி வெளிவந்த பின்னும் இந்த படம் இவ்வளவு கலெக்ஷனை அள்ளுகிறதே எப்படி? கோ படத்தில் பெற்ற நல்ல பெயரை இனிவரும் ரௌத்திரம், வந்தான் வென்றான் படங்களில் அடைவாரா ஜீவா? இரு படங்களுமே முடிந்த நிலையில் அவர் ஒப்புக் கொண்டிருக்கும் அடுத்த படம் என்ன? இப்படி ஏராளமான கேள்விகள்.

திருட்டு விசிடி விஷயத்தில் நமது பதில் எதுவுமில்லை. ஆனால் ஜீவாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் விசாரித்து அறிய முடிந்தது.

இயற்கை, ஈ, பேராண்மை படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் இடத்தை பிடித்திருக்கும் எஸ்.பி.ஜனநாதனை சந்தித்தாராம் ஜீவா. அப்போது இவருக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார் ஜனநாதன். தஞ்சை பெரிய கோவிலை பின்னணியாக கொண்ட சரித்திரக் கதையாம் இது.

நீங்கள் நினைப்பது போல மன்னர், மகுடம் போன்ற பில்டப்புகளோ, 'யாரங்கே...' கட்டளைகளோ இல்லாத யதார்த்த சினிமாவாக இருக்குமாம் அது. கேட்ட மாத்திரத்தில் ஆஹா என்று துள்ளிக்குதித்தாராம் ஜீவா. இன்னும் சில வாரங்களில் இந்த அறிவிப்பு கோலாகலமாக வெளிவரலாம்!

2 கருத்துகள்:

 1. உண்மையில் கோ தற்காலத்தில் வந்த ஒரு வித்தியாசமான படம்...

  இனி நீங்களும் நம்ம ஓடையில் நிரந்தரமாய் குளிக்கலாம்...

  பதிலளிநீக்கு
 2. திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
  அதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி

  http://tamilthirati.corank.com/

  தங்கள் வரவு இனிது ஆக

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.