உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/19

மிரட்டும் கார்த்திகா டென்ஷனில் ஹன்சிகா!


கோ படம் மூலம் 'ஜெய்'ஹோ என்று ராதா மகள் கார்த்திகா பாட ஆரம்பித்திருப்பதால் முதலிடத்திற்கு
 முட்டிக் கொண்டிருக்கும் சில நாயகிகளிடையே பீதி கிளம்பியுள்ளதாம்.

அந்தக் காலத்து முன்னணி நாயகி ராதா. அவரது மகள் கார்த்திகா. கூடிய விரைவில் இவரும் ஒரு பிசியான நாயகியாகி விடுவார் போலத் தெரிகிறது. காரணம், கோ படத்தில் கிடைத்த செமத்தியான பிரேக்கால்.

சில நேரங்களில் ராதாவின் சாயல் தெரிகிறது. சில நேரங்களில் ராதாவை மிஞ்சும் சாயல் தெரிகிறது - கார்த்திகாவிடம்.

இந்த வித்தியாசமான அழகுக்கு, கோ படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அம்மா ராதாவம், மகள் கார்த்திகாவும் பூரிப்பில் உள்ளனர். தேவைப்பட்டால் கார்த்திகா கவர்ச்சியாகவும் நடிக்கலாம் என்று ராதா கொள்கை முடிவு எடுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கூட பூரிப்பு தென்படுகிறதாம்.

நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களைத் தேர்வு செய்து கார்த்திகாவுக்கு கொடுக்கப் போகிறார் ராதா. கோ பட வெற்றியைத் தொடர்ந்து கார்த்திகாவை நோக்கி நிறையப் பேர வர ஆரம்பித்துள்ளனர் கதையுடன். அவற்றை தீவிரமாக பரிசீலித்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து வருகிறாராம் ராதா.

அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் கார்த்திகாவைக் காணலாம் என்கிறார் ராதா நம்பிக்கை பிளஸ் சந்தோஷத்துடன்.

கார்த்திகாவின் இந்த திடீர் விஸ்வரூபத்தால் ஏற்கனவே முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி, அமலா பால் உள்ளிட்டோர் சற்றே கலங்கிப் போயுள்ளனராம்.

ஏற்கனவே இவர்கள் வந்துதான் தமன்னாவை பேக்கப் செய்து விரட்டினர். அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே கார்த்திகாவின் வருகை, இவர்களை சற்றே பயம் கொள்ளச் செய்துள்ளதாம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.