உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/18

வித்தியாசமான மூன்று வேடங்களில் சோனியா அகர்வால்

‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இவரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் செல்வராகவனை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே, விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்.

இதன்பிறகு திரையுலகில் மறுபிரவேசம் செய்த சோனியா அகர்வாலிற்கு வானம் படத்தில் இயக்குனர் கிரிஷ் வாய்ப்பு தந்தார்.

முன்பை விட தனது உடலின் எடையைக் குறைத்து சிக்கென்று இருக்கிறார். இது குறித்தும், இவரது அடுத்த படங்கள் குறித்தும் சோனியா அகர்வாலிடம் கேட்டதற்கு;

“முன்பு இருந்ததை விட 7 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். புரோட்டின் டயட்டில் இருக்கிறேன். முன்பை விட தற்போது அழகாக இருப்பதாக கருதுகிறேன். வானம் படத்திற்குப் பிறகு ரமேஷ் இயக்கும் ‘மாதா பிதா குரு’ படத்தில் நடிக்க இருக்கிறேன். குழந்தைகளின் பிரச்சினையை மையமாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்படுள்ளது.

இப்படத்தில் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன் சாமியாரினியாகவும், வில்லியாகவும், தொலைக்காட்சி நிருபராகவும் நடிக்கிறேன். இப்படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இரண்டு தமிழ் படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.