உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/19

வடிவேலுக்கு படங்களில் நடிக்க தடை?

தமிழக தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை விமர்சித்த காரணத்தினால் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிக்கக்கூடாது என முக்கிய சினிமா சங்கங்களுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.

ஆனால் இன்று, அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இனிவரும் நாட்களிலாவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் சிரமம்தான். எல்லாம் இந்த தேர்தல் செய்த வேலை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை ஏகத்துக்கும் அவர் விமர்சித்ததுதான் இத்தனைக்கும் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட, இப்போது அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் மதுரை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வைகைப் புயல்.

இந்த நிலையில் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி செய்தியை அவருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளிலும் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிகக்கூடாது என வாய்மொழி உத்தரவாக முக்கிய சினிமா சங்கங்களுக்கு போடப்பட்டுள்ளதால் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்பு 2006-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், கருணாநிதியை தரக்குறைவாகப் பேசியதற்காக நடிகர் செந்திலையும் திரையுலகம் கடந்த 5 ஆண்டுகளில் கண்டுகொள்ளாமல் இருந்தது நினைவிருக்கலாம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.