உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/01

நீங்கள் செய்யும் வேலையை எவ்வாறு விரும்பிச் செய்வது


நாம் விரும்பியதைச் செய்வது எம் வாழ்வில் நாம் அனுபவிக்கக் கிடைத்த ஒரு வரம். ஆனால், பல நேரங்களில் நாம் எமது தொழிலில் அல்லது பொறுப்புக்களில் செய்வதறியாது தடைப்பட்டு நின்று விடுகிறோம்.
நீங்களும் நானும் எமது வாழ்வில் சகஜமான விருப்பங்களைக் கொண்டிருக்கிறோம். அவற்றை நிறைவேற்றவும் முயற்சிக்கிறோம். நாம் செய்வதை அனுபவித்து செய்ய இங்கு சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் விருப்பத்தை அறிந்து அதை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் தற்போதுள்ள வேலையிலோ அல்லது பதவியிலோ உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் அந்த வேலையிலிருந்து விலகிவிடுங்கள்.
நீங்கள் செய்வதை அனுபவித்து செய்யும்போது அதற்கான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வதோடு அந்த வேலை உங்களுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கும்.
உங்கள் விருப்ப உணர்ச்சிகளைப் பயிரிடுங்கள். நீங்கள் செய்வதை அனுபவித்துச் செய்வதற்குக் கண்டிப்பாக அதை நீங்கள் விரும்பிச் செய்ய வேண்டும்.
அப்படியிருந்தால் தான் நீங்கள் எதையாவது சாதிக்க முடியும். அது உங்களை உயரத்திற்குத் தள்ளிச் செல்லும்.
உங்கள் வாழ்வை சமப்படுத்துங்கள். நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், ஆனால் அளவுக்கு அதிகமாகச் செய்யாதீர்கள்.
நீங்கள் விரும்பிச் செய்யும் செயலானது உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதிதான், அதுவே உங்கள் முழு வாழ்க்கையில்லை.
முக்கியமான முக்கியமல்லாத வேலைகளைக் கோடிட்டுக்கொள்ளுங்கள். தற்போதுள்ள உங்கள் தொழிலை அனுபவித்து செய்து அதற்கான பலனையும் அனுபவியுங்கள்.
உங்கள் வழியிலேயே செல்லும் ஏனையவர்களையும் கண்டுபிடியுங்கள். அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் செய்வதில் ஓர் அருமையான மாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் விரும்பிச் செய்யும் வேலையில் அதிக ஈடுபாடு ஏற்படும். அது ஒரு விலையற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.