உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/02

பின்லேடன்-ஒரு பார்வை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரகசியமாக தங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவு பிரிவு படையினர் திடீர் தாக்குதல் நடத்தி வேட்டையாடியிருக்கின்றனர். இதனால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் உள் அப்பட்டாபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் இருந்தபோது கொல்லப்பட்டான். இவனை வேட்டையாடும் அரங்கேற்றம் குறித்து பாக்., அதிகாரிகளுக்கு கடைசிவரை தெரிவிக்கப்படவில்லை . தாக்குதல் ஆப்ரேஷன் முடியும் வரை ரகசியமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


யாரும் நுழைய முடியாத வகையில் வீடு : வெளி தொடர்புக்காக சில, நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார். அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும். கூரியர் தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினார். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது. இந்த வீடு 2005ல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம், வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில், இரண்டு அடுக்கு "கேட்' அமைக்கப்பட்டிருந்தது. வீட்டில், போன் அல்லது இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. குப்பை கூட வெளியே செல்லக் கூடாது என்பதால், அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன. அவ்வளவு பாதுகாப்பு இருந்தும், ஒசாமாவை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அழித்து விட்டன.

யார் இந்த பின்லேடன்? : ஒசாமா பின் லேடன், சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்தார். முழுப்பெயர், ஒசாமா பின் முகமது பின் ஆவாத் பின்லேடன். தந்தை முகமது பின் ஆவாத் பின்லேடன் ஒரு வியாபாரி. இவரது பத்தாவது மனைவி ஹமீதாவிற்கு பிறந்த ஒரே மகன் ஒசாமா. இவர், இளவயதிலிருந்தே வகாபி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார்.

படிப்பில் குழப்பம்? : ஒசாமா, பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சவுதியில் உள்ள கீங் அப்துல்லாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார் என்றும், 1979ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார் என்றும், 1981ஆம் ஆண்டு பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனில் பட்டம் பெற்றார் என்றும் பல குழப்பங்கள் நிலவுகின்றன. இது தவிர அவர் மூன்றாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

17 வயதில் திருமணம்:1974ஆம் ஆண்டு, 17வது வயதில் நஜ்வா கனீம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன் பிறகு 3 திருமணங்கள் செய்தார். 25 குழந்தைகள் உள்ளனர். 

பல முறை கொல்லப்பட்டதாக தகவல் : இதற்கு முன், பின்லேடன் பதுங்கு குழியில் இருக்கிறார், இறந்து விட்டார் என்று பல விதமான செய்திகள் வெளிவந்தன. ஆனால் நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தது போல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

*டிச.,11, 2005ம் ஆண்டு அல்குவைதாவின் மூத்த உறுபினரான அதியா அப் அல் ரகுமான், ஈராக் போரின் போது ஜோர்டானியன் ராணுவத்தில் இருந்த அபு முசாப் அல் ஜார்குவாவிக்கு கடிதம் அனுப்பினார். அதில் பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பகுதியில் ஒசாமா இருப்பதாகவும், அவரது படைகள் பலம் குன்றி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

* 2009ஆம் ஆண்டு லாஸ் ஏன்ஜல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினரான கிளெஸ்பி மற்றும் அக்நியூ, சாட்டிலைட் உதவியுடன் நிலஇயல் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் இறுதியில் பாகிஸ்தானில் உள்ள பராச்சினர் என்ற நகரின் ஒசாமா இருக்கிறார் என்று மூன்று இடங்களை சுட்டிக்காட்டினர். 

* மார்ச், 2009ல் பாகிஸ்தானின் சித்ரல் மாவட்டத்தில் பின்லேடன் படைகள் இருப்பதாக "நியூயார்க் டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டது. 

* டிசம்பர், 2009ல் பாகிஸ்தானில் தாலிபன் பிடியிலிருந்த ஒரு நபர் ஆப்கானிஸ்தானில் பின்லேடன் இருப்பதாகவும் தான் பார்த்ததாக அறிவித்தார். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் கிலானி இதை மறுத்தார். 

* ஜனவரி 15, 2010ல், எப்.பி.ஐ., "டிஜிட்டல்'முறையில் வயதான பின்லேடன் எவ்வாறு இருப்பார் என்று போட்டோக்களை வெளியிட்டது. 

* ஜூன் 7, 2010ல், குவைதி அல் சியாசா என்ற அமைப்பு ஈரானின் வடகிழக்கு பகுதியில் உள்ள சவ்ஷீவர் பகுதியில் உள்ள மலைகளில் பின்லேடன் மறைந்திருப்பதாக தெரிவித்தது. ஜூன் 9ல் ஆஸ்திரேலியாவில் உள்ள "ஆன்லைன்' பத்திரிகை இதே கருத்தை வெளியிட்டது. 

* அக்டோபர் 18, 2010ல், நேட்டோ படை அதிகாரி ஒருவர், ""பின்லேடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக பாகிஸ்தானில் உள்ளார்'' என்றார். இதற்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிகாரி, ""பாகிஸ்தான் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. எங்கள் அரசிற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.'' என தெரிவித்தார். 

அல்-குவைதா துவங்கி வளர்ந்த வரலாறு : 1979: ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை எதிர்த்து சோவியத் யூனியன் போரிட்டது. இந்த பயங்கரவாத அமைப்போடு பின்லேடனும் இணைந்து கொண்டார்.

1986-87: சோவியத் யூனியனுக்கு எதிரான போரில், முஜாகிதீன் அமைப்பின் , நிதி நிர்வாக தலைவராக செயல்பட்டார். கொரில்லா படை தலைவராகவும் திகழ்ந்தார். 

1988: முஜாகிதீன் அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் துணையுடன் ஒசாமா பின்லேடன், அல்-குவைதா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினார். 

1989: சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்லேடனும் சவுதிக்கு திரும்பினார். அவரது தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை பார்த்துக்கொண்டார். ஆப்கன் போரில் தனது நெட்வொர்க் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்கினார். 

1990 ஆக.7: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேற வலியுறுத்தி, ஈராக் படைகளுக்கு எதிராக போரிடுவதற்கு சவுதிக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதி கேட்டது. சவுதி அனுமதியை தொடர்ந்து அமெரிக்க படைகள் ஈராக் படைகளுக்கு எதிராக போரிட்டது. சவுதியின் மெக்கா, மெதினா நகரங்களுக்கு அருகில் அமெரிக்க படைகள் இருப்பதற்கு பின்லேடன் எதிர்ப்பு தெரிவித்தார். 

1991 : சவுதி அரசுக்கு எதிராக போரட்டம் நடத்திய ஒசாமாவுக்கு குடியுரிமையை, சவுதி அரசு ரத்து செய்தது. சூடானில் பின்லேடன் தஞ்சம் அடைந்தார். 

1992, டிச. 29: ஏமன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் இரண்டு ஆஸ்திரிய சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இது பின்லேடன் மற்றும் அவரது அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. 

1993, பிப். 26: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது தாக்குதல் நடதத்தப்பட்டது. இதில் ஆறு பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1995 கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் கென்ய அமெரிக்க தூதரக தாக்குதலில் 213 பேர் பலி, 4,500 பேர் காயம். தான்ஜானியா அமெரிக்க தூதரகத்தில் 11 பேர் பலி, 85 பேர் காயம்.

1996 : அமெரிக்கா மற்றும் சவுதி ஆகிய நாடுகளின் வேண்டுகோளை அடுத்து சூடான், ஒசாமாவை வெளியேற்றியது. இதனால் பின்லேடன் தனது 3 மனைவி மற்றும் 10 குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்தார். அமெரிக்காவுக்கு எதிராக "புனித போர்' நடத்தப்போவதாகவும் அறிவிப்பு. 

2000, அக். 12: ஏமனில் கப்பல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 17 பேர் பலி. அல்-குவைதா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. 

2001, செப். 11: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பினர், அமெரிக்காவின் 4 விமானங்களை கடத்தி, இரட்டை கோபுர கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3000க்கும் மேற்பட்டோர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம். 

2001, அக். 7: அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடுவதென முடிவெடிக்கப்பட்டது. 

2004, அக். : இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, முதல்முறையாக ஒசாமா பின்லேடன் அறிவிப்பு. 

2011, மே 2: அமெரிக்க உளவுத்துறை நடத்திய தாக்குதலில் பின்லேடன் பலியானார் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.