உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/24

கல்யாணம் ஆச்சுன்னா அவ்வளவுதான். அப்புறம்...-பாவனா"நடிகையாக இருப்பது பற்றி பல சமயங்களில் யோசித்திருக்கிறேன். நடிகையாக இருப்பதால் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கிடைப்பதில்லை. வீட்டிலும் சரி; வெளியிலும் சரி யாரும் என்னை ஒரு சாதாரணப் பெண்ணாக பார்ப்பதில்லை. நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். அதனாலேயே பொய்முகம் காட்டி பேசுகிறார்கள். நடிகையாவதற்கு முன்பெல்லாம் இப்படியில்லை. சமீபத்தில்தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. படப்பிடிப்பின்போது என்னைச் சுற்றி நிறைய பேர் இருந்தாலும் தனிமையில் இருக்கிற உணர்வுதான் எனக்கு வரும்.

அதேபோல் ஒரு பிரச்சினை என்றாலும் நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வெற்றிப் பெற்ற நடிகையாக இருப்பதற்காக நான்தான் போராடணும். சறுக்கி விழுந்தாலும் நான்தான் பார்த்துக்கணும். என்ன வாழ்க்கை இது? என்று கூட சில நேரம் தோன்றும்..." என்று பக்குவப்பட்ட மனதோடு பேசுகிறார் பாவனா.

'சித்திரம் பேசுதடி' பட மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவருக்கு அடுத்தடுத்து அமைந்த படங்கள் ஏனோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனாலும், மலையாளத்திலும், தெலுங்கிலும் அவருக்கான இடம் என்பது இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அரை செஞ்சுரி படங்களில் நடித்து, முடித்துள்ள பாவானாவிடம் ஒரு சிறப்பு நேர்காணல் இதோ!

அரை செஞ்சுரி படங்கள் முடித்ததற்கு வாழ்த்துகள் பாவனா. ஐம்பது படங்களில் நடித்ததிலிருந்து சினிமாவை எந்தளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?

பதினாறு வயதிலேயே சினிமாவுக்கு வந்துட்டேன். அறிவு, பழக்க வழக்கம் எல்லாமே மாறிப்போயிடுச்சு. நல்ல சினிமாவையும், நல்ல புத்தகங்களையும் தேடிப் பிடித்து வாங்கி பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு ஆணும்-பெண்ணும் கட்டிப்பிடிச்சா ஐய்யோன்னு நினைப்பேன்.

சினிமாவுக்கு வந்த பிறகு நடிப்புக்காக கட்டிப் பிடிக்கும்போது அந்த எண்ணம் மாறிடுச்சு. கணவன், மனைவி கட்டிப்பிடிச்சாதான் வாழ்க்கைன்னு புரிஞ்சது. சினிமாவில் கத்துக்க நிறைய இருக்கு. இப்போதெல்லாம் தனியாகவே படப்பிடிப்புக்குப் போக தைரியம் வந்திருக்கு. நிறைய பொறுமையும், நிதானமும் சினிமாவின் மூலமாக பெற்றிருக்கிறேன். வேறென்ன சொல்ல?

பெண்ணாகப் பிறந்தது பற்றி எப்பாவது யோசித்திருக்கிறீர்களா?

எப்பாவது என்ன? பலமுறை யோசிச்சிருக்கேன். ஒரு பையனா பிறக்கலையேன்னு சில சமயம் வருத்தப்பட்டிருக்கிறேன். என்னுடைய வீட்டில் எங்க அண்ணனுக்கு ரொம்ப சுதந்திரம் இருக்கு. ஆனால் எனக்கு கிடையாது. அண்ணன் எங்க வேணாலும் போவான். ஸ்கூல் விட்டு கொஞ்சம் லேட்டாக கூட வருவான். அவனை யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க. ஆனால், என்னை மட்டும் கேட்பாங்க.

அதேபோல சினிமாத் துறையில் பார்த்தீங்கன்னா ஒரு ஆண் நிம்மதியாக இயக்குநராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, கதாநாயகனாகவோ வேலைப் பார்க்கலாம். நீண்ட நாளைக்கு கூட அவங்க சினிமாவில் நிலைத்து நிற்கலாம். ஆனால், ஹீரோயின்ஸோட வாழ்க்கை அப்படியில்லை.

கல்யாணம் ஆச்சுன்னா அவ்வளவுதான். அப்புறம் அம்மா, அக்காவா ஆக்கிடுவாங்க. மிகக் குறைந்த காலகட்டத்தில்தான் எங்களை நாங்கள் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கு. அதேபோல எங்கேயாவது தனியாகப் போனாலும் பிரச்சினைதான். அதனாலதான் பையனாகப் பிறப்பது நல்லதுன்னு நினைக்கிறேன்.

பிரச்சினைகள் வரும்போது அதை எப்படி எதிர்கொள்வீங்க?

நமக்கு வாழ்க்கை நிறைய பாடம் கற்றுக்கொடுக்குது. பிரச்சினைகள் யாருக்குத்தான் இல்லை? சினிமாவுக்கு மட்டும் நாம வராம இருந்திருந்தால் நாம என்னவாகியிருப்போம்னு தனியாக இருக்கும்போது நினைச்சி பார்ப்பேன். ஏதாவது ஒரு கடையில் சேல்ஸ் கேர்ளாக இருந்திருப்பேன். ஸ்கூல் லைஃப் ரொம்ப ஹேப்பியாக இருந்திருக்கு. பரீட்சையின்போது மட்டும்தான் பயம் வரும். வாழ்க்கைன்னு வந்திட்டா பிரச்சினைதான். அதை எதிர்கொண்டுதான் ஆகணும். வேறு வழியில்லை.

எனக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது தன்னம்பிக்கையளிக்கும் புத்தகங்களை படிப்பேன். அதுதான் நல்ல தோழியாக இருந்து நமக்கு ஆலோசனைகள் சொல்லும். அப்போது மனசு ரிலாக்ஸ் ஆகும். அதேமாதிரி நல்ல பாடல்களை கேட்பேன்.

காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?

சினிமாவில் காதலிப்பது போல் நடித்திருக்கிறேனே தவிர, காதலைப் பற்றி பெரிசா எனக்கு எதுவும் தெரியாது. காதலுக்காக வாழ்க்கையை நாசம் பண்ணிக்க மாட்டேன். காதலுக்காக வாழ்க்கையை முடிச்சிக்கறதை எதிர்க்கிறேன். கடைசி வரை போராடி வாழணும். அதுதான் வாழ்க்கை. இன்னொரு ஜென்மம் என்று எதிர்பார்ப்பதை விட இந்த ஜென்மத்திலேயே நாலு பேருக்கு உதவியா வாழ்ந்துட்டுப் போகணும். காதல் வாழ்க்கையை மேம்படுத்தணும். காலை வாரக் கூடாது.

வாழ்க்கைப் பற்றிய கனவு ஏதாவது உண்டா?

நிறைய கனவுகள் இருக்கு. இப்போதிருக்கும் இடத்திலிருந்து இன்னும் உயரே போக வேண்டும் என்று கனவு காண்பேன்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.