உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/25

மீரா ஜாஸ்மின் திருமணம். சினிமாவுக்கு குட்பை!

மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக உள்ளதால், இனி சினிமாவில்
நடிப்பதில்லை என நடிகை மீரா ஜாஸ்மின் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் இளைஞன்.

மீரா ஜாஸ்மினும் மாண்டலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். படங்களில் நடித்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார்.

ஆனால் தற்போது அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி உள்ளிட்ட புது நாயகிகள் வரத்தால் மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. சமீபத்தில் ரிலீசான படங்களும் நன்றாக ஓடவில்லை. எனவே மாண்டலின் ராஜேஷை விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டாராம் மீரா ஜாஸ்மின்.

சமீபத்தில் நடந்த மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் 'அம்மா'வின் நிகழ்ச்சியில் மீரா பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இனி யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. காரணம் இனி சினிமாவில் நடிப்பதாகவும் இல்லை," என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.