உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/19

கிளாமராக நடிப்பதில் தவறேதும் இல்லை நடிகை வேகா


வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘சரோஜா’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வேகா. இப்படம் இவருக்கு
 பெயர் வாங்கித் தரவில்லை என்றாலும் பாண்டிராஜின் இயக்கத்தில் வெளிவந்த ‘பசங்க’ படம் இவருக்கு அமோக வரவேற்பை பெற்றுத் தந்தது.

அதன் பிறகு தமிழில் தலை காட்டாமல் இருந்த வேகா, பாலிவுட்டிற்க்கு போனார். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் பரத்துடன் ‘வானம்' படத்தில் நடித்துள்ளார்.

ஒரு விழாவிற்கு வந்திருந்த நடிகை வேகாவை சந்தித்து, ‘ஏன் இந்த இடைவெளி..?’ என்று கேட்டோம்.

“தமிழில் ‘சரோஜா', ‘பசங்க' என இரண்டு படங்களிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்தேன். "பசங்க' படத்துல ‘ சோபிக்கண்ணு’ கேரக்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் தமிழில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.

ஹிந்தியில் சில படங்களை உடனடியாக முடிக்க வேண்டி இருந்ததால், தமிழில் வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். ஆனால் சிலர் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்றார்கள். அதைக் கேட்கவே மிகவும்சந்தோஷமாக இருந்தது.

ஹிந்தியில் ஒரு படத்தில் மார்டன் உடைகளை அணிந்து கவர்ச்சியாக நடித்தேன். அது பெரிய விமர்சனத்துக்கு உள்ளனாது. கிளாமராக நடிப்பதில் தவறேதும் இல்லை. கேரக்டரின் பலம் அறிந்துதான் கிளாமரில் நடிக்கிறேன். மற்றபடி எதற்காகவும் கிளாமரை நான் ஏற்பதில்லை. வானம்' படத்தில் மாடர்னாக நடித்தேன். இனி தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்த உள்ளேன்'' என்றார்.

‘சோபிக்கண்ணு கிளாமர் நடிப்பு இங்கயும் வருமா..?’

2 கருத்துகள்:

  1. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஷர்புதீன் மார்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.