உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/21

ஹீரோ ஹோண்டா, ஹீரோ மோட்டோ என மாற்றம்.

உலகின் மிகப்பெரிய இருசக்கர தயாரிப்பாளரான இந்தியாவை சேர்ந்த ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் பிராண்டு பெயர், ஹீரோ மோட்டோ என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், சமீபத்தில் விலகிக்கொண்டது. இதையடுத்து, ஹீரோ ஹோண்டாவில் அங்கம் வகிக்கும் ஹீரோ நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் தனித்து ஈடுபட உள்ளது.

மேலும், ஹீரோ ஹோண்டாவின் பிராண்டு பெயரை மாற்றவும் ஹீரோ முடிவு செய்துள்ளது. புதிய பிராண்டு பெயர் மற்றும் சின்னம் உருவாக்கும் பணிகள் பிரிட்டனை சேர்ந்த பிரபல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய பிராண்டுக்காக ரூ.200 கோடி வரை செலவிடுகிறது ஹீரோ நிறுவனம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹீரோ ஹோண்டா பிராண்டுக்கு தனி மவுசு உள்ளதால், புதிய பிராண்டு மற்றும் சின்னங்கள் உருவாக்குவதில் மிகுந்த சிரத்தை எடுத்து செய்து வருகிறது பிரிட்டன் நிறுவனம்.

இந்த நிலையில், ஹீரோ மோட்டார்ஸ் என்பதை சுருக்கி ஹீரோ மோட்டோ என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 கருத்து:

 1. பிரிந்தது
  தெரிந்தது தான்
  ஆனால் பெயர்
  திரிந்தது
  தெரியாதது..
  தகவலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.