உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/08

உங்களைப் பற்றி யாருக்குத் தெரியும்?


சுயத்தை அறிந்துகொள்ளுங்கள் என்பது மரபு வழி ஞானமாகும். மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்வதைவிட நாம் நம்மைப் புரிந்துகொள்வது இயற்கையான போக்கு என்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் சிமைன் வாஷிரும் அவரது சகபாடியான எரிக்கா என்.கார்ல்சனும்.
நமக்கு நம்மைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதல்ல இதற்கான அர்த்தம். ஆனால், நமது புரிந்துணர்வு கரும்புள்ளிகளாலும் நம்முடைய விருப்பங்களாலும் பயங்களாலும் சுய உணர்வற்ற உந்துசக்திகளாலும் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளது.
நாம் நம்முடைய ஒரு வீடியோக் காட்சியினைப் பார்வையிடும்போது உணர்ந்துகொள்ளாத சிலவற்றை மற்றவர்கள் எளிதாக உணர்ந்து அதை எமக்குத் தெரியப்படுத்துவார்கள்.
நம்முடன் நெருங்கிப் பழகுபவர்கள், நம்முடன் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் நம்மைப் பற்றி நன்கு தெரிந்திருப்பார்கள். நம்மைப் பற்றி முன்னர் தெரிந்திராத ஒரு புதிய நபர் கூட நாம் யார் என்பதை எமது உடைகள், இசை விருப்பம் அல்லது முகப்புத்தகப் பதிவுகள் போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்வார்கள்.
வாழ்க்கைத் துணை அல்லது எமது குழந்தை கூட மற்ற கணவன் மனைவியரைப் பற்றியோ பெற்றோர்கள் பற்றியோ சிலவிடயங்களைக் கூறுவார்கள். “நாங்கள் சில கருத்துக் கணிப்புகளை இது பற்றி சில பெற்றோரிடம் நிகழ்த்தினோம். ஆனால் அவையெல்லாம் பயனற்றவை என்பதால் அவற்றை நிறுத்திவிட்டோம்.” என்கிறார் வாஷிர்.
அந்தத் தரவுகள் எதைக் காட்டுகின்றன என்றால் ஒவ்வொருவரினதும் சொந்தக் குழந்தைகள் அறிவாளிகள், அழகானவர்கள், வசீகரமானவர்கள் என்பதைத் தான்!
மனிதர்கள் தம்மைப்பற்றி மற்றவர்கள் பார்ப்பவற்றை அப்படியே அவர்கள் பார்ப்பதில்லை. நமது குணாதியத்துடன் தொடர்புபட்ட மேடைப் பயம் போன்ற கவலை நமக்கு வெளிப்படையானதாக இருக்கும், ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாது.
மறுபக்கமாக, படைப்பாற்றல், புத்திசாதுர்யம் அல்லது நமது முரட்டுத்தனம் போன்றவை மற்றவர்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மற்றவர்கள் நமது பலத்திற்கு அதிக மதிப்பெண்களை வழங்குவார்கள் அதை வைத்து நம்மை நாமே பாராட்டிக்கொள்கிறோம்.
இந்தத் தகவல்கள் எல்லாம் ஏன் ஒரு சிறந்த சுயத்தை அல்லது பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதில்லை? மனிதர்களின் மனப்பாங்கு, சொந்த தேவைகள் மற்றும் வேறுபாடுகள் என்பன இதற்கான காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், உங்களைப் பற்றி பிறர் கூறுவதைக் கவனியுங்கள். உங்களை விட அவர்களே உங்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கக்கூடும்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.